Aran Sei

சாதி அமைப்புக்குக் காரணமானவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள்: இட ஒதுக்கீடு என்பது பிச்சையல்ல, அது நமது அரசியல் சாசன உரிமை – சித்தராமையா கருத்து

சாதி அமைப்புக்குக் காரணமானவர்கள் இப்போது இட ஒதுக்கீடு முறையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஆனால் இட ஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல. இட ஒதுக்கீடு என்பது நமது அரசியல் சாசன உரிமை என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஓய்வுபெற்ற நீதியரசர் நாகமோகன் தாஸ் இட ஒதுக்கீடு பற்றி எழுதிய மித் & ரியாலிட்டி புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கலந்துகொண்டு பேசினார். அப்போது சமூகத்தில் நிலவி வரும் சாதிய அமைப்புமுறை குறித்தும், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களையும் கடுமையாக விமர்சித்தார்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு

அதில், “கடந்த காலத்தில் கல்வி, அதிகாரம் ஆகியவற்றை பிராமணர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும் என்பது இட ஒதுக்கீடு போன்றது அல்லவா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, சூத்திரர்களுக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் உழைத்து உற்பத்தி செய்த பொருட்களை அனுபவிக்கும் வாய்ப்பும் மறுக்கப்பட்டது. அநீதி அல்லவா. ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் நலனைப் பாதுகாக்க சமூகத்தில் சாதி அமைப்பு தொடர்ந்தது. இது சமூகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளார்.

“அந்த காலத்தில் நிலவியது எழுதப்படாத இட ஒதுக்கீடு. இதை கொண்டு வந்தவர்கள் யார்? வளங்களை அனுபவித்தவர்கள் யார்? சமூகத்தில் சாதிய அமைப்பு முறையைக் கொண்டு வந்தவர்கள், இப்போது இட ஒதுக்கீடு எவ்வளவு காலம் தொடரும் என்று கேள்வி கேட்கிறார்கள். இன்னும் சிலர் ஏன் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். கல்வி, அதிகாரம் என அனைத்தும் எந்த ஒரு சாதியினருக்கும் சொந்தமானது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸின் படி யார் இந்து? – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி

“மில்லர் கமிஷன் அறிக்கைக்குப் பிறகு மைசூர் சமஸ்தானத்தில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு முறையை யார் எதிர்த்தார்கள் என்று நான் கேட்டால் கோபப்படுவார்கள். மத்திய கிழக்கிலிருந்து ஆரியர்கள் இங்கு வந்து திராவிடர்களாகிய நம் மீது அட்டூழியங்களைச் செய்தார்கள் என்று சொன்னாலும் கோபம் வரும். தனியாக பேசினாலும் திட்டுகிறார்கள். அதனால் தான் நம்மில் பலரும் இதுகுறித்து பேசுவதில்லை. இது நாட்டிற்கும், சமூகத்திற்கும் சரியாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, அண்ணல் அம்பேத்கர் இல்லையென்றால், அரசியல் சாசனம் எழுதியிருக்க முடியுமா? இட ஒதுக்கீடு என்பது நமது அரசியல் சாசன உரிமை. 1955ல் போராட்டத்தில் ஈடுபடாமல் அமைதியாக இருந்தோம். இன்னும் அமைதியாக இருந்தால் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாது. சுயமரியாதை இருந்தால்தான் நாம் மரியாதையாக வாழ முடியும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

Source : the hindu

ஓபிஎசை சமாளிக்க முடியாமல் திணறும் எடப்பாடி SP Lakshamanan Latest Interview

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்