Aran Sei

மாற்றுப்பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்- பீகார் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மாற்றுப்பாலினத்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர்(OBC) பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பீகார் அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது என்று லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள மாற்றுப்பாலினத்தவரின் நலன் குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், பீகார் மாநில உயர்நீதிமன்ற அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுப்பாலினத்தவர்கள், பாலியல் தொழிலாளர்கள் ரத்ததானம் செய்யத் தடைவிதிக்கக்கூடாது – உச்சநீதி மன்றத்தில் மனு

அந்த மனுவில், பீகார் மாநிலத்தில் மாற்றுப்பாலினத்தவரின் நிலைமை படுமோசமாக உள்ளதாகவும், கொரனோ காலத்தில் உணவுக்காக தவிக்கும் சூழல் நிலவியது என்றும் குறிப்பிட்டுள்ளதாக லைவ் லா செய்தி தெரிவிக்கின்றது.

உயர்நீதிமன்ற அமர்வு இந்த மனு மீதான விசாரணையின்போது, மாற்றுப்பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க பீகார் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மாற்றுபாலினத்தவர்கள் காவலராக நியமனம் – சத்தீஸ்கர் காவல்துறை முதல்முறையாக நடவடிக்கை

இதற்குப் பதிலளித்த பீகார் அரசு, “காவல் துறையில் துணை ஆய்வாளர் மற்றும் காவலர் பணிகளில் மாற்றுப்பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளதாகவும் லைவ் லா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுப்பாலினத்தவர்களை கொண்ட சிறப்புக் காவல் படை உருவாக்கப்பட இருக்கிறது என்று பீகார் அரசு கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்

இதைத்தொடர்ந்து, பீகார் மாநிலத்தில் 39,000 மாற்று பாலினத்தவர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு அரசின் வேறுதுறைகளிலும் தக்க இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக லைவ் லா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு கர்நாடக அரசு மாற்றுப்பாலினத்தவர்களுக்கு ஓபிசி (பிற்படுத்தப்பட்ட) பிரிவின் கீழ் இடஒதுக்கீடு அளிக்க அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கருத்து கேட்க அனுப்பிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்