Aran Sei

அரசுப் பணியிடங்களில் மாற்றுப் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

Image Credits: The Hindu

மாற்றுப் பாலினத்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வரை தமிழக அரசு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018, 2019, 2020-ம் ஆண்டுகளில் இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறை வார்டன் மற்றும் தீயணைப்புத் துறைவீரர்கள் தேர்வு தொடர்பாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இப்பணியிடங்களுக்கு மாற்றுப் பாலினத்தவர் விண்ணப்பிக்கும்போது தங்களை ஆண் என அடையாளப்படுத்தினால் ஆண்களுக்கான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும், பெண் என அடையாளப்படுத்தும்போது பெண்களுக்கான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பேரிடர்கள்: ஐபிசிசி அறிக்கை விடுக்கும் எச்சரிக்கைகள் என்னென்ன?

இந்த அறிவிப்பை எதிர்த்தும், மாற்றுப் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு, எழுத்து தேர்வு, உடல்தகுதி தேர்வுகளிலும், கட்-ஆப் மதிப்பெண்களிலும் சலுகை வழங்கக்கோரி மாற்றுப் பாலினத்தவர்களான தேனி ஆராதனா, சாரதா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ” மாற்றுப் பாலினத்தவருக்கு தனியாக, குறி்ப்பிட்ட சதவீதம் வரை இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை. எனவே, மாற்றுப் பாலினத்தவர்களான மனுதாரர்கள் இப்பணியிடங்களுக்கான ஆரம்பகட்ட தேர்வு நடவடிக்கைகளில் தகுதி பெற்றதாகக் கருதி, உடல் தகுதித் தேர்வு உள்ளிட்ட பிற தேர்வுகளில் அவர்களுக்கு பெண்களுக்கான சலுகைகளை வழங்கி, 8 வாரங்களில் தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும்” என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

மனைவிக்கு கணவன் கீழ்ப்படியலாமா?: இந்திய ஆண்கள் கூறியதென்ன – ஆய்வு தகவல்

மேலும், “எதிர்காலத்தில் அரசுப் பணி நியமனங்களில் சலுகைகள் மட்டுமின்றி, மாற்றுப் பாலினத்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் வரை தமிழக அரசு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்