Aran Sei

இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு நோட்டீஸ் அனுப்பிய ரிபப்ளிக் டிவி – அர்னாப் பற்றிய செய்தி வெளியானதற்கு எதிர்வினை

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு, ரிபப்ளிக் தொலைக்காட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

அர்னாப் கோஸ்வாமி, கடந்த மூன்று ஆண்டுகளில் 12 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 40 லட்சம் ரூபாயை பார்க் (Broadcasting Audience Research Council) அமைப்பின் முன்னாள் தலைவர் பார்தோ தாஸ்குப்தாவிற்கு லஞ்சம் கொண்டுத்தாக வெளியான செய்திக்காக நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை காவல்துறைக்கு தாஸ்குப்தா, தனது கைப்பட எழுதிய வாக்குமூலத்தில்,  அவ்வாறு குறிப்பிட்டு இருந்ததாக, கடந்த ஜனவரி 25 ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.

டிஆர்பி முறைகேடு வழக்கு – பார்க் அதிகாரிக்கு அர்னாப் கோசாமி பணம் கொடுத்தது அம்பலம்

அந்த வாக்குமூலம் “நிர்பந்ததின் மூலம் பெறப்பட்டது, அதற்கு நீதிமன்றத்தில் எந்த மதிப்பு இல்லை” என தாஸ்குப்தாவின் வழக்கறிஞர் அர்ஜூன் சிங் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோட்டீஸ் குறித்து லைவ்லாவ் இணையதளத்தின் செய்திபடி, ரிபப்ளிக் தொலைக்காட்சி, ஃபீனிக்ஸ் லீகல் மூலம் அனுப்பியுள்ள நோட்டீஸில், இந்தியன் எக்ஸ்பிரஸின் நோக்கம், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. மேலும், ”இதன் மூலம் தனது பொருளதார மற்றும் வர்த்தக நலன்களை முன்னெடுக்கும் நோக்கம் உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

உண்மை சரிபார்ப்பு – செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை அகற்றவில்லை, காலிஸ்தான் கொடியை ஏற்றவும் இல்லை

ஒரு தவறான தலைப்பின் மூலம், ” அனைத்து பத்திரிக்கை நெறிமுறைகளையும் மீறி, அந்த தேசிய தினசரி ஒரு நீதிபதி, ஒரு நடுவர் மற்றும் ஒரு மரண தண்டனை வழங்குபவர் போல செயல்பட்டுள்ளது” என நோட்டீஸில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடந்து வரும் வேலையில், இது போன்ற செய்திகளை வெளியிடுவது, நீதிமன்ற அவமதிப்பு என்றும், ஜனவரி 6, 2021 அன்று மும்பை அமர்வு நீதிமன்றத்தில் தாஸ்குப்தா தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் ரிபப்ளிக் டிவி, டிஆர்பி திருத்ததில் ஈடுபடவில்லை என்பதை காட்டுகிறது என நோட்டீஸ் குறிப்பிடப்பட்டுள்ளதாக லைவ் லா கூறியுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்