Aran Sei

பாதிக்கப்பட்டவர் போன்று நாடகமாடும் ரிபப்ளிக் நிறுவனம்: மும்பை காவல்துறை குற்றச்சாட்டு

தொலைகாட்சி மதிப்பீடு புள்ளிகளில் முறைகேடு செய்த வழக்கில், ரிபப்ளிக் நிறுவனம் ’’பாதிக்கப்பட்டவர்’’ (Victim) போன்று நாடகமாடி, வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற முயல்வதாக மும்பை காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், ஏஆர்ஜி அவுட்லையர் மீடியா பிரைவெட் லிமிடட் மற்றும் ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, தங்களுடைய செய்தி நிறுவனத்தை பயன்படுத்தி மும்பை காவல்துறையினருக்கு எதிராக பழிவாங்கும் நோக்கோடு செயல்படுவதாகவும், அர்னாப் கோஸ்வாமி நேரடியாக தலையிட்டு, தங்களுடைய செய்தி சேனலின் வழியே சாட்சிகளை மிரட்டுவதாகவும் மும்பை காவல்துறை தெரிவித்திருந்தது.

இதையடுத்து மும்பை காவல்துறை, ரிபப்ளிக் நிறுவனம் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையையும், தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்யக் கோரி, ஏஆர்ஜி அவுட்லையர் மீடியா,  நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மனிஷ் பிடலே ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் மனு தாக்கல் செய்திருந்தது.

கீதா பிரஸ் முதல் அர்னாப் கோஸ்வாமி வரை – இந்தியாவின் மாபெரும் வலதுசாரி ஊடக இயக்கம் – பகுதி 4

இதற்கு பதிலளித்துள்ள மும்பை காவல்துறையினர், ரிபப்ளிக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவே முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அர்னாப் கோசாமிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கிய நீதிமன்றம் – மார்ச் 5 வரை நடவடிக்கை கூடாது என உத்தரவு

இந்த வழக்கில் தாங்கள் குற்றமும் செய்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை, தவறாக இணைக்கப்பட்டிருக்கிறோம் என கூறும் ரிபப்ளிக் நிறுவனம்,  வழக்கை சிபிஐக்கு மாற்றச் சொல்வது எதனால் என பதில் மனுவில் கேள்வியெழுப்பியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அர்னாப் குறித்து நிகழ்ச்சி நடத்திய டைம்ஸ் நவ் : நெறியாளர் மீது அவதூறு வழக்கு தொடுத்த ரிபப்ளிக் தொலைக்காட்சி

மேலும், இந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே நடைபெற்று கொண்டிருக்கும் சூழலில் விசாரணை அமைப்புகளை இதற்கு அழைக்க கூடாது எனவும் இந்த வழக்கில் யாரும் தவறாக இணைக்கப்படவில்லை எனவும் காவல்துறை மனுவில் தெளிவுப்படுத்தியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்