Aran Sei

டிஆர்பி முறைகேடு வழக்கு – ரிபப்ளிக் டிவி நிர்வாகிக்கு மூன்றே நாளில் ஜாமீன்

credits : financial express

டிஆர்பி (தொலைகாட்சி மதிப்பீடு புள்ளிகள்) முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரி விகாஸ் கான்சந்தானி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பீமா கோரேகான் பாடகர்கள் கைதுக்குக்கான காரணம் – மோடியை விமர்சித்த பாடல்

கடந்த அக்டோபர் மாதம், ஒரு போலி டிஆர்பி மோசடிக் கும்பல், தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி புள்ளிகளில் மோசடி செய்வதாக, மதிப்பீட்டு மீட்டர்களின் மூலமாக டிஆர்பி புள்ளிகளை ஆய்வு செய்யும் ஹன்சா ரிசர்ச் என்ற ஏஜென்சியின் அதிகாரி நிதின் தியோகர், பார்வையாளர் ஒளிபரப்பு ஆய்வு கவுன்சிலிடம் (பார்க்) புகார் அளித்தார்.

பீமா கோரேகான் வழக்கு – பார்வை குறைபாடுள்ள நவ்லாகாவுக்கு கண்ணாடி தர மறுப்பு

அந்தப் புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் தொலைகாட்சி, இந்த மோசடியில் ஈடுபட்டதாக முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டது. ரிபப்ளிக் தொலைகாட்சியின் இயக்குநர்கள், விளம்பரதாரர்கள் பணியாளர்கள் என அனைவரும் இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்று மும்பை மாநகரக் காவல்துறை கூறியது.

இந்த விவகாரம் தொடர்பாக  விசாரணை நடத்திய மும்பை காவல்துறை, டிஆர்பி புள்ளிகளை அதிகமாக கொண்டிருப்பதாகக் கூறும் ரிபப்ளிக் தொலைக்காட்சி, அதிக விளம்பர விகிதங்களைப் பெறுவதற்காக, மதிப்பீடு மீட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும் வீடுகளுக்கு லஞ்சம் கொடுத்து டிஆர்பி புள்ளிகளில் மோசடி செய்ததாக தெரிவித்தது.

83 வயது ஸ்டேன் சாமிக்கு வழங்க உறிஞ்சு குழல் இல்லை – நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்

இதையடுத்து டிஆர்பி மோசடி வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (13-12-20) ரிபப்ளிக் டிவியின் முதன்மை செயல் அதிகாரி விகாஸ் கான்சந்தானி அவருடைய இல்லத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். டிஆர்பி மோசடி வழக்கில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட 13-வது நபர் விகாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமடைந்து வரும் வரவர ராவின் உடல்நிலை ; கண்டுகொள்ளாத அரசு

இந்நிலையில் டிஆர்பி முறைகேடு தொடர்பாக மும்பை காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் விகாசின் பெயர் இடம்பெறவில்லை என்றும், அர்னாப் கோஸ்வாமிக்கும் மகாராஷ்டிரா அரசாங்கத்துக்கும் இடையே இருக்கும் பிரச்சனையினாலும் ரிபப்ளிக் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரே காரணத்திற்காகவும் விகாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் ஆபத் போண்டா வாதிட்டுள்ளார் என பார் அண்ட் பெஞ்ச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த மும்பை மாநகர நீதிமன்றம், விகாஸ் கான்சந்தானியை பிணையில் விடுவித்துள்ளது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்றே தினத்தில் விகாஸ் சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்