Aran Sei

குடியரசு தின டிராக்டர் பேரணி: கலந்து கொள்ள பயிற்சி பெறும் பெண்கள்

credits : shepoeple

த்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற கோரி, கடந்த 55 நாட்களாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக வருகிற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி ஒன்றை நடத்த இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன.

இந்த டிராக்டர் பேரணி தொடர்பாக மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறும்போது, “புதிய விவசாய சட்டங்களுக்கு பெரும்பாலான விவசாயிகள் ஆதரவாக உள்ளனர். விவசாயிகள் தங்கள் பிடிவாதப் போக்கை கைவிட வேண்டும்.” என்று தெரிவித்திருந்தனர்.

மறுபுறம், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தனர்.

’விவசாயிகளின் ட்ராக்டர் பேரணிக்கு இன்று ட்ரைலர்’ – டெல்லி நெடுஞ்சாலைகளில் குவிந்த விவசாயிகள்

அதில், “விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்திய அரசு பல முறை முயற்சித்தது. ஆனால்,அது பலனளிக்கவில்லை. அதனால், அராஜக வழியை அரசு தற்போது தேர்ந்தெடுத்துள்ளது. என்ஐஏ, அமலாக்கத் துறை விசாரணைகள் மூலம் விவசாயிகளைப் பணிய வைத்துவிடலாம் என்று அரசு நினைக்கிறது. அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.” என்று கூறியிருந்தனர்.

ஜனவரி 26 பேரணி – லட்சம் டிராக்டர்களை அணிதிரட்டும் விவசாயிகள் சங்கங்கள்

இந்நிலையில், வரும் குடியரசு தினத்தன்று மிக அமைதியான முறையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் எத்தகைய தடைகள் வந்தாலும் இந்தப் பேரணியை நடத்திக்காட்டுவோம் என்றும் விவசாய சங்கங்கள் உறுதிபட கூறியுள்ளன.

’டெல்லி குடியரசு தின டிராக்டர் பேரணி தடைகளை தாண்டி நடக்கும்’ : விவசாய சங்கங்கள் திட்டவட்டம்

இந்நிலையில், விவசாயிகள் திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணி அமைதியான முறையில் நடப்பதை விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் உறுதி செய்வார்கள் என மகிளா கிசான் அதிகார் மன்ச்சின் பிரதிநிதி கவிதா குருகந்தி தெரிவித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 26 – டெல்லி டிராக்டர் பேரணிக்கு பஞ்சாபில் பெருமளவு தயாரிப்புகள்

விவசாயிகள் போராட்டம் அமைதியான முறையில் நடப்பதற்கு பெண்கள் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறார்கள் என்றும் பல இளைஞர்கள் பொறுமையிழந்து போனாலும் அங்கு இருக்கும் பெண்களால் அவர்களை அமைதிப்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளனர்.

“டெல்லிக்குள் யார் நுழையலாம் என்று உத்தரவிட முடியாது” – டிராக்டர் பேரணிக்கு தடைகோரி வழக்கில் நீதிமன்றம் கருத்து

”குடியரசு தினத்தன்று அமைதியை நிலைநாட்ட ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள்” எனவும் கவிதா குருகந்தி தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்று நடக்கும் டிராக்டர் பேரணியில் கலந்துக்கொள்ள பல பெண்கள் தயாராகிக் கொண்டிருப்பதாகவும்  மகிளா கிசான் அதிகார் மன்ச்சின் பிரதிநிதி கவிதா குருகந்தி  கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்