Aran Sei

குடியரசு தின டிராக்டர் பேரணி மோதல் – நடிகர் தீப் சித்து குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம்

தீப் சித்து, அவரது இரு கூட்டாளிகள் மற்றும் செங்கோட்டையில் சீக்கியர்களின் புனித கொடியான ’நிசான் சாகிப்’ கொடி ஏற்றியதாகக் குற்றம்சாட்டப்படும், ஜுக்ராஜ் சிங், குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும்,  என டெல்லி காவல்துறை அறிவித்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குடியரசு தின டிராக்டர் பேரணியின்போது,  காவல்துறை மற்றும் விவசாயிகளின் ஒரு பிரிவினரிடையே நடைபெற்ற மோதலுக்கு காரணமானவர்கள், எனக் குற்றம்சாட்டப்பட்டவர்களை தேடுவதற்காக டெல்லி மற்றும் பஞ்சாப்பில் காவல்துறையினர், சோதனைகளை நடத்திவருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் எனக் கூறப்படும் ஜஜ்பீர் சிங், பூடா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என்றும், காவல்துறை கூறியிருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நிறுத்தம்: ’69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சூழ்ச்சி’ – திருமாவளவன்

குடியரசு தினத்தன்று நடைபெற்ற மோதல் தொடர்பாக, காவல்துறையினர் இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்து, 122 நபர்களைக் கைது செய்திருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், அடையாளம் காணப்பட்டவர்களில்,  குறைந்தது ஐந்து நபர்கள் மீதாவது பஞ்சாப் மாநிலத்தில் குற்றவழக்கு பதியப்பட்டு காவல்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றொரு முதல் தகவல் அறிக்கையில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து, மால்வா இளைஞர் கூட்டமைப்பின் தலைவரான சிங் சித்தானா ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக வரலாற்றை திருத்துகிறது; விவசாயிகளிடம் அரசு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் – திருச்சி சிவா

போராட்டக்காரர்களில் சிலர், டெல்லியைச் சேர்ந்தவர்கள் எனக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்,  அவர்களைக் கைது செய்யத் தேவையான ஆதாரங்களைக் காவல்துறையினர் திரட்டி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செங்கோட்டையில், சீக்கியர்களின் புனித கொடியான ‘நிசான் சாகிப்’ கொடி ஏற்றிய ஜூக்ராஜ் சிங், என்ற இளைஞர் கடந்த ஆண்டு, நைஜீரியா நாட்டிலிருந்து வந்ததாகப் பஞ்சாப் காவல்துறையினர் கூறியிருக்கும்  நிலையில், ஜூக்ராஜ் நிரபராதி என்றும், சக போராட்டக்காரர்களின் தூண்டுதல் காரணமாக அவர் கொடி ஏற்றக் கம்பத்தின் மீது ஏறியதாக, ஜூக்ராஜின் குடும்பத்தினர் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்