பிரியங்கா காந்தியை குறித்து தவறான செய்தியை ஆதாரமின்றி வெளியிட்ட ரிபப்ளிக் பாரத் தொலைக்காட்சி, உண்மை தெரிந்ததும் அதற்கு மன்னிப்பு கோராமல், செய்தியை நீக்கி விட்டதாக தி வயர் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் மாநிலம், மதுராவில் ஒரு விவசாயிகள் பஞ்சாயத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது உத்திரபிரதேச எல்லையான பரத்பூர் பகுதியில், ஒரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதற்கு நியாயம் வேண்டும் எனச் சிறுமியின் பெற்றோர் கோரினர். அந்தப் பெற்றோர்களுடன் வந்திருந்த சிலர், ‘பேடி கோ நியாய் தோ (எங்கள் மகளுக்கு நியாயம் கொடுங்கள்)’ எனக் கோஷங்களை எழுப்பினர். ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு விதமாக, முயன்றும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் தங்களை மிரட்டுவதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது குடும்பத்தினரும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்த ரிபப்ளிக் பாரத் டிவி, தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ஆர்ப்பாட்டர்களை காவல்துறை கைது செய்தது என்றும், சிறுமியின் குடும்பத்தை பிரியங்கா பார்க்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது.

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த ரிபப்ளிக் பாரத் தொலைகாட்சி தற்போது அதை நீக்கியுள்ளது.

பிரியங்கா காந்தி தனது பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு, ஆர்பாட்டக்காரர்களின் பேச்சை கேட்க மேடையில் இருந்து இறங்கி வந்தார் என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
#WATCH | A group of people raised slogans during Congress leader Priyanka Gandhi Vadra's address at a farmers' rally in Mathura, seeking her intervention in a rape case in Bharatpur, Rajasthan. She got down from the stage & listened to the grievances of the demonstrators. pic.twitter.com/FTfVlC8kUZ
— ANI UP (@ANINewsUP) February 23, 2021
என்டிடிவி செய்தியாளர் சௌரவ் சுக்லா, தனது ட்விட்டர் பதிவில் ரிப்பளிக் செய்தியை மேற்கோள் காட்டி, ”இது தவறான செய்தி, பிரியங்கா மேடையில் இருந்து இறங்கி வந்து, பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று அவர்களின் புகாரை கேட்டதோடு, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டிடம் கூறினார்” எனப் பதிவிட்டிருந்தார்.
ये ग़लत ख़बर है.. क्या हुआ : प्रियंका गांधी स्टेज से उतरीं , पीड़िता को अपने साथ ले गईं , उसकी पूरी बात सुनी और राजस्थान के मुख्यमंत्री अशोक गहलोत से बात भी की .. https://t.co/yn7rLZPDzc
— Saurabh shukla (@Saurabh_Unmute) February 23, 2021
இதேபோல், மேலும் பல ஊடகவியலாளர்களும் இதே கருத்தை பதிவிட்டிருந்தனர்.
BREAKING: The girl from Rajasthan who reached out to Priyanka Gandhi seeking justice was given immediate attention by her.
She stopped her speech midway to meet her, took her away, dialled CM Ashok Gehlot and directed him to ensure speedy justice for her. Gehlot assured of it. pic.twitter.com/cntntncFx5
— Prashant Kumar (@scribe_prashant) February 23, 2021
உத்திரபிரதேச காங்கிரசும், தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்டவர்களின் புகாரை கேட்டு முதல்வரிடம் தெரிவித்தார் என்றும், சிறுமியை காவல்துறை கைது செய்யவில்லை” எனவும் பதிவிட்டிருந்தது.
..@Republic_Bharat ये आप एकदम झूठी खबर फैला रहे हैं। प्रियंका गांधी जी ने भाषण रोककर पीड़िता की बात सुनी। उसको साथ लेकर अलग से बात की एवं राजस्थान में सीएम से बात कर एक्शन लेने को कहा।@mathurapolice ने लड़की को अरेस्ट नहीं किया।
ये ट्वीट डिलीट करिए वरना लीगल कार्यवाही की जायगी। https://t.co/Be7NBntXFV
— UP Congress (@INCUttarPradesh) February 23, 2021
இந்நிலையில், தவறான செய்தியை வெளியிட்ட ரிபப்ளிக் பாரத், அந்தச் செய்தியையும், ஒரு ட்விட்டர் பதிவையும் நீக்கியது. செய்தியை பகிர்ந்த இன்னொரு பதிவு அப்படியே உள்ளது. ஆனால் அதில் இருக்கும் சுட்டி (Link), அந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்திற்கு செல்கிறது.
राजस्थान: प्रियंका गांधी ने सभा में इंसाफ की गुहार लगाने पहुंचे रेप पीड़िता के परिवार को किया अनसुना, पुलिस ने किया गिरफ्तारhttps://t.co/z5Gul4pGfD
— रिपब्लिक.भारत (@Republic_Bharat) February 23, 2021
இதனையடுத்து ரிபப்ளிக் வெளியிட்டுருந்தத புதிய செய்தியில், “பிரியங்கா பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டிருந்தது.
राजस्थान: प्रियंका गांधी ने सभा में इंसाफ की गुहार लगाने पहुंचे रेप पीड़िता के परिवार से की मुलाकात, सीएम से बात कर एक्शन लेने को कहाhttps://t.co/oMan1MOzUr
— रिपब्लिक.भारत (@Republic_Bharat) February 23, 2021

முன்னர் தவறான செய்தியை பதிவிட்டுருந்ததை ஒப்புக்கொள்ளாமல், அதன் தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை மட்டும் ரிபப்ளிக் பாரத் தொலைகாட்சி மாற்றியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.