2018 மற்றும் 2019 நிதியாண்டில் இந்தியாவில் உள்ள 7 தேசியக்கட்சிகள் வைத்துள்ள மொத்த சொத்தில் 54.29 விழுக்காடு சொத்துக்களை பாரதீய ஜனதா கட்சி கொண்டுள்ளதாக ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பு(Association of democratic reforms ) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், மாநிலக் கட்சிகளின் சொத்து மதிப்பின் அடிப்படையில் அதிமுக மூன்றாவது இடத்திலும், திமுக 5 வது இடத்திலும் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சிவிட்டு கட்சி தாவும் விகிதம் 39% அதிகரிப்பு – ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பு அறிக்கை
ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் , முதலிடத்தில் உள்ள பாஜகவின் சொத்து மதிப்பு 2904.18 கோடி ரூபாயும், இரண்டாம் இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 928.84 கோடி ரூபாயும், மூன்றாமிடத்தில் உள்ள பகுஜன் சமாஜ்வாடி கட்சிக்கு 738 கோடி ரூபாயும் சொத்து உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோன காலத்தில் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி? – ராகுல் காந்தி கேள்வி
இதேபோல, தமிழகத்தில் அதிகபட்சமாக அதிமுக 206.75 கோடி ரூபாயும், திமுக 190.38 கோடி ரூபாயும், அதற்கடுத்து பாட்டாளி மக்கள் கட்சி 6.60 கோடி ரூபாய் சொத்து உள்ளதாகவும் ஜனநாயக மாற்றத்திற்கான கூட்டமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு ரூபாய் கூட வைப்புநிதியாக வங்கியில் இருப்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கட்சிகளிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25.32 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SOURCE: ASSOCIATION OF DEMOCRATIC REFORMS
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.