Aran Sei

நமது நாடு கடந்த சில வருடங்களாக, மோசமான நிலையைச் சந்தித்து வருகிறது – மாணவசெயற்பாட்டாளர் நடாஷா நர்வால் கருத்து

வேலைவாய்ப்பின்மை, சாதி மற்றும் சமூக மோதல்கள்,தொழிலாளர்கள் உரிமைகள் மீதான தாக்குதல்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்திருப்பதாக, டெல்லி கலவரத்தில் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளிவந்துள்ள நடாஷா நர்வால் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட நடாஷா நர்வால் – 3 வார பிணைக்கு பின் சிறையில் அடைப்பு

கடந்த ஜூன் 17 அன்று , டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து டெல்லி கலவரக்கில் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு சட்டவிரோத (நடவடிக்கைகள்) தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் சங்கப் பிரதிநிதிகள் நடாஷா நர்வால், தேவங்கனா கலிதா, ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவ செயற்பாட்டாளர் நடாஷா நர்வாலுடன், தி இந்து மின்னஞ்சல் வழியாக நடத்திய பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிஏஏ எதிர்ப்பு போராளி நடாஷா நர்வாலின் தந்தை மரணம் – சிறையில் இருக்கும் மகள் தந்தையின் முகத்தை காண முடியாத சோகம்

டெல்லி காவல்துறை கடைசி நிமிடம் வரை, உங்களை பிணை உத்தரவில் விடுவிக்க காலதாமதம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது குறித்த உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு,”உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட நாட்கள் சிறையில் கழிப்பதையும் , மிகவும் கஷ்டப்பட்டு போராடி பிணை பெறுவது போன்றவற்றையும் பார்த்து, நாங்கள் நீண்ட நாட்கள் சிறையில் இருக்க தயாராகவே இருந்தோம். எனினும் இந்த தாமதங்கள் எதிர்பார்க்காத ஒன்றே. டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட நடாஷா நர்வால் – 3 வார பிணைக்கு பின் சிறையில் அடைப்பு

மேலும், கடந்த ஒருவருட சிறைவாசம் உங்களுக்கு எவ்வாறு இருந்தது என்ற கேள்விக்கு, ஒருவருட சிறைவாசம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுத் தந்தது. சிறைக்கு உள்ளும், வெளியேயும் பலரின் அன்பு வெகுவாக ஊக்கமளித்தது என்றும். அதே சமயம், முறையான சட்ட உதவிகள் இன்றி சிறைக்குள் தவிக்கக்கூடியவர்கள் மீதான அத்தகைய வன்முறை மற்றும் அநீதி களையப்பட வேண்டும் என்றும், நாங்கள் சுதந்திரத்தின் மதிப்பையும், சமூகத்தில் சுதந்திரத்தையும் முன்னெப்போதையும் விட அதிகமாக உணர்ந்துகொண்டோம் என்றும் நடாஷா நர்வால் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அவரது தந்தையின் மரணம் குறித்து எழுபப்பட்ட கேள்விக்கு, ‘என் தந்தையோடு தொலைபேசியில் உரையாட, சிறையில் எனக்கு மிகக் குறுகிய நேரமே அளிக்கப்பட்டது.(தினசரி 5 நிமிட மட்டுமே). என் தந்தை இறந்த தகவலை கேட்டபோது ஏற்பட்ட கவலை, பதட்டம் மற்றும் உதவியற்ற தன்மையை நான் கட்டுப்படுத்த வேண்டியிருந்ததால் என்னை அது அதிகமாக பாதித்தது. நீதித்துறை மற்றும் சிறைத்துறை நிர்வாகத்தின் தொடர் அநீதியானது என்னை பாதித்துக் கொண்டே இருந்தது’ என்று அவர் கூறியுள்ளதாகவும் தி இந்து தெரிவிக்கிறது.

சிஏஏ எதிர்ப்பு போராளி நடாஷா நர்வாலின் தந்தை மரணம் – 3 வாரம் பிணை  வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

இதனைத்தொடர்ந்து,மறைமுக அவசர காலநிலை போன்று கருத்துரிமைக்கு அபாயம் நிலவும் சூழல் உள்ளதாக சிலர் கருதுவது குறித்த உங்கள் பார்வை என மின்னஞ்சலில் கேட்கப்பட்ட கேள்விக்கு, கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறை ஆளும் ஆட்சியின் பலவீனத்தையும், அதன் மக்கள் விரோத தன்மையையும் அம்பலப்படுத்துகிறது. சி.ஏ.ஏ எதிர்ப்பு இயக்கங்கள், விவசாயிகள் போராட்டம் மற்றும் கொரோனாவை அரசு கையாண்ட விதம் குறித்த மக்களின் கருத்து போன்றவற்றை அரசின் அடக்குமுறையால் ஒடுக்கமுடியவில்லை என்றும், நடாஷா நர்வால் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

மேலும், கடந்த ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் கருத்துரிமை மற்றும் போராடுவதற்கான உரிமை ஆகிவற்றில் ஏதேனும் மாற்றம் உள்ளதா எவ்வாறு? என்று கேள்விக்கு,இந்த ஆட்சி நமது சமுதாயத்தின் அடிப்படையையே மாற்ற முயற்சிக்கிறது, வெறுப்பைத் தூண்டுகிறது மற்றும் மக்களை விரக்தியில் தள்ளுகிறது. நமது நாடும் சமுதாயமும் கடந்த சில வருடங்களாக, மோசமான நிலையைச் சந்தித்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை, சாதி மற்றும் சமூக மோதல்கள்,தொழிலாளர்கள் உரிமைகள் மீதான தாக்குதல்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது என்று மாணவசெயல்பட்டாளர் நடாஷா நர்வால் கூறியுள்ளதாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்