உலக நாடுகளின் பத்திரிக்கை சுதந்திரத்துக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் மிக மோசமான நிலையில் உள்ளதாக “எல்லைகளற்ற பத்திரிக்கையாளர்கள்”(Reporters Without Borders) என்ற அமைப்பு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
உலகளவில் 180 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 142வது இடத்தில், பத்திரிகை சுதந்திரத்தில் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான ஊழல் தரவரிசை பட்டியல் – 86 வது இடத்திற்கு சரிந்தது இந்தியா
இந்து தேசியம் குறித்து பேசக்கூடிய இந்துத்துவ அமைப்பினர் மீது பொது வெளியில் கேள்வி எழுப்பக்கூடிய பத்திரிகையாளர்களைத் தேச துரோகிகளாகச் (anti- indian) சித்தரிப்படுவதாகவும், அவர்கள் இந்துத்துவ அமைப்பினரால் மிரட்டப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அரசுக்கு எதிராகக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்கள் தேச துரோகிகளாகச் சில சமயங்களில் பயங்கரவாதிகளாகப் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவாளர்களால் கூறப்படுவதாகவும், குறிப்பாக அவர்கள் பெண்களாக இருப்பின் அவர்கள்குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாகவும், தொலைபேசி வழியாக மிரட்டுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இதேபோலக் களத்தில் தகவல் சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள் பாஜக தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரும்பாலும் காவல்துறை அதற்கு உடந்தையாகச் செயல்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பத்திரிகைகளின் ட்விட்டர் கணக்குகள் கூட கடுமையான தணிக்கைக்கு உள்ளானதாகவும், மறுபரிசீலனை செய்யக்க்கூட வாய்ப்பளிக்கவில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
போலியான தகவல்களுக்கு எதிராக ஊடகம் மிக சிறந்த தடுப்பு மருந்தாகும் ஆனால் கெடுவாய்ப்பாக அரசியல், பொருளாதார,தொழிநுட்ப, பண்பாட்டு காரணங்களினால் பத்திரிகையாளர்களின் பணி முடக்கப்படுவதாகவும் எல்லைகளற்ற பத்திரிக்கையாளர்கள் அமைப்பின் அறிக்கையில் கூறியுள்ளது.
source: Reporters Without Borders, report-2021
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.