Aran Sei

இந்தியாவில் சிறையில் உள்ள பத்திரிகையாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சிபிஜே கடிதம்

ந்திய – ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டின் போது, இந்தியாவில் பத்திரிகை சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் விடுவிப்பது குறித்து முன்மொழிய வேண்டுமென, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு (Committee to Protect Journalists) என்ற சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர்க்கு மின்னஞ்சல் வழியாக இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.

கொரோனா பாதிப்பால் மரணமடையும் பத்திரிகையாளர்கள்: உலகளவில் இந்தியா மூன்றாம் இடம்

அந்த கடிதத்தில், இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தை எட்டியிருக்கும் சூழலில் அரசின் நடவடிக்கைகள் குறித்து விமர்சிப்பவர்கள் மற்றும் செய்தி வெளியிடுபவர்களை அரசு முடக்கி வருவதாகவு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டே இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எண்ணற்ற பத்திரிகையாளர்கள் மிரட்டப்பதாகவும், கைது செய்யப்பட்டதாகவும் அதுகுறித்த ஆவணங்களை பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு திரட்டியிருப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை – அரசின் மிரட்டல் என்று பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு

குறிப்பாக கொரோனா காலத்தில் உணவு வழங்குவதில் நடந்த முறைகேடு குறித்து செய்தி வெளியிட்ட ஆண்ட்ரு சாம் ராஜன் பாண்டியன் கைது செய்யப்பட்டதாகவும், வாரணாசியில் கொரோனா காலத்தில் பசியால் வாடிய மக்கள் குறித்து செய்தி வெளியிட்ட ஸ்க்ரால் செய்தியாளர் சுப்ரியா சர்மா மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, புர்கான் வாணி (காஷ்மீர் போராளி) குறித்து பத்திரிகையில் எழுதிய ஆசிப் சுல்தான் கைது செய்யப்பட்டுள்ளது, மத்திய அரசு குறித்து விமர்சித்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஆனந்த் டெல்தும்டே கைது செய்யப்பட்டது, அதே நாளில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடனும், மாவோயிஸ்ட்களுடனும் தொடர்பில் இருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு பத்திரிகையாளர் கவுதம் நவுலக்கா கைது செய்யப்பட்டதும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் போகும் வழியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் : காவலை நீட்டித்த நீதிமன்றம்

மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் சித்திக் காப்பான், கடந்த அக்டோபர் 20 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு கைவிலங்கிடப்பட்டே சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்தும், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ஜனநாயகத்தன்மை மற்றும் மனிதஉரிமைக்கு மதிப்பளிக்கும் வகையிலும், பத்திரிகை சுதந்திரத்தை காக்கும் வகையிலும், இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் விடுதலை செய்ய இந்திய – ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டின் போது முன்மொழிய வேண்டுமெனவும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு (CPJ) வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்