செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகர காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் துரைராஜ் என்பவர் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
திரையரங்குகளில் 100% அனுமதி : தமிழக அரசின் ஆணையை எதிர்த்து – உயர் நீதிமன்றத்தில் மனு
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்த போது, ஏராளமான கொலை வழக்குகள் 15 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கிறது எனவும் இத்தனை ஆண்டுகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை கைதிகளாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய வழக்குகளில் கூடச் சாட்சிகள் கருத்தை மாற்றிக் கூறும் நிலையில், 15 ஆண்டுகளுக்கு மேல் வழக்குகள் விசாரணை நிலுவையில் இருந்தால், சாட்சி சொல்ல யார் வருவார்கள், எப்படி தண்டனை பெற்று கொடுக்கப் போகிறீர்கள் எனவும் காவல் துறையினரை நோக்கி நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
‘ஈழத்தமிழருக்கும் சிறுபான்மையினருக்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி’ – ஸ்டாலின் குற்றச்சாட்டு
மேலும், சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் குறித்து ஜனவரி 25-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
’பிசி, எம்பிசி ஏழை மாணவர்களுக்கும் முழு கல்விக் கட்டணம் இலவசம்’ – புதுவை முதல்வர் அறிவிப்பு
இந்த அறிக்கையைப் பார்த்த பின் ஆணையரை அழைத்து விளக்கம் கேட்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்றும், மீதமுள்ளவர்களுக்கு எதிரான வழக்கை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.