Aran Sei

தேசத்தின் பலவீனங்களை சுட்டிக்காட்டினால் தேசவிரோதிகளா? – ஆல்பர்ட் பி ரயன்

தேசபக்தியின் பெயரால் நாம் இந்தத் தேசத்தின் குறைபாடுகளை ஏற்க மறுக்கிறோம்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில நாட்களுக்கு முன்பு , மாணவர்களுக்குப் பள்ளிகளில் தேசபக்தி கற்பிக்கப்படுவதில்லை அவர்களுக்குப் பள்ளிகளில் தேசபக்தி கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்ததார்

‘தேசபக்தியே ஒரு இந்துவின் அடிப்படை தன்மை’ – ஆர்எஸ்எஸ் தலைவர்

இதே போல டெல்லி மாநில பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அம்மாநில நிதித்துறை அமைச்சர் மனிஷ் சிசோடிய அந்தப் பட்ஜெட்டை தேசபக்தி பட்ஜெட் எனக் குறிப்பிடுகிறார்.

ஆக்ஸ்போர்ட் அகராதியின் படி தேசபக்தி என்பது ‘உங்கள் நாட்டின் மீதான அன்பும் ,அதைப் பாதுகாப்பதற்கான விருப்பமும் ” என்று குறிப்பிடுகிறது. இதேபோல காலின்ஸ் ஆங்கில அகராதியின் படி ‘உங்கள் நாட்டிற்கான அன்பும், விசுவாசமும் ‘ எனக் குறிப்பிட்டுள்ளது.

தேச பக்தியை வைத்து அரசியல் செய்யக் கூடாது – பாஜகவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

இந்த இரண்டு அகராதிகளின் விளக்கத்தின் படி தேசபக்தியை இவ்வாறு புரிந்து கொள்ளலாம். நாம் நேசிக்கும் நாட்டைப் பாதுகாப்பதற்கான விருப்பமும் ,அதன் மீதான விசுவாசமும் ஆகும்.

மேலும், தேசப்பற்று என்கிற போர்வையில் தேசத்தின்மீதுள்ள வெறியால் தேசத்தின் பலகீனங்களை கண்டுகொள்வதேயில்லை.  அதுமட்டுமன்றி நாட்டின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டுபவர்களை தேசத்திற்கு எதிரானவர்களாக (anti nationals) சித்தரிக்கப்படுகிறார்கள்.

நாட்டுப்பற்றுக்கு மதம் இல்லை – மோகன் பக்வத்திற்கு ஆதாரம் தருகிறோம் – ஃபைசான் முஸ்தஃபா

கெஜ்ரிவாலுக்கு ஒன்று தெரிவிக்க நிலைக்கிறேன்.தேசபக்தியை பள்ளிகளில் கற்பிக்க முடியாது. ஏனென்றால், அது தன்னிச்சையாக, இயற்கையாகத் தோன்ற வேண்டும், ஒரு தாய்யை எப்படி நேசிக்க வேண்டும் எவ்வாறு மகனுக்குக் கற்பிக்க முடியும்.

மாணவர்களுக்கு முற்போக்காகச் சிந்திக்கக்கூடிய உணர்வுகள் மேலோங்குவதற்கு நாம் கற்பிக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன் கோவிலுக்குள் தாகத்தால் நீர் அருந்தச் சென்ற இஸ்லாமிய சிறுவனை அந்தக் கோவிலின் ஊழியர் கொடூரமாகத் தாக்கினார். ஏற்றுக்கொள்ள முடியாத, மனிதத்தன்மை அற்ற இது போன்ற சம்பவங்களுக்குத் தேசப்பற்றின் பெயரால் தீவிரதேசியவாதம் பேசுவது அபத்தமானது.

SOURCE; முனைவர். ஆல்பர்ட் பி ரயன் தி இந்துவில் வெளியிட்ட கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்