Aran Sei

‘தமிழக அரசின் தெளிவற்ற ஊடரங்கு’ – பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முடிவெடுத்த தொழிலாளர்கள்

ணியிடத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாலும், கொரோனா தொற்றால் 5க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரிழந்திருப்பதாலும், பாதுப்பான பணி சூழல் ஏற்படுத்தித் தரும் வரை பணிக்கு வரமாட்டோம் என ரெனால்ட் நிசான் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் சார்பில்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிவரை நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு வாரக் காலத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக  வெளியிடப்பட்ட அறிக்கையில், தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொழிற்சாலைகள் இயங்கிக் கொள்ள அரசு அனுமதியளித்துள்ளது.

இந்த அனுமதியின் மூலம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் மீது புகார்: போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முன்னாள் மாணவர்கள் வேண்டுகோள்

”ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தொழிற்சாலைக்குத் தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழ்நிலையிலேயே பணி செய்யும் சூழ்நிலை இருந்து வருதால், பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தித் தராத பட்சத்தில் மே 26 ஆம் தேதி காலை முதல் ஷிப்டில் இருந்து பணிக்கு வருவதில்லை” என ரெனால்ட் நிசான் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “ஊரடங்கு காலத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி, உற்பத்தியை நிறுத்தி விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிற்சங்கம் சார்ப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை தொடர்பாக பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும், முடிவுக்கு வராமல் அரசாங்கம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. இதனைச் சுட்டிக்காட்டி அரசு வைத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் இல்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இறந்தவர்களின் உடலைக் கண்ணியத்தோடு நடத்தவேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தொண்டுநிறுவனம் மனு

இந்நிலையில், ரெனால்ட் நிசான் இந்தியா தொழிற்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பதிலளிக்க ஆலை நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று வருகிறது.

நமது சங்கத்தின் கோரிக்கையைத் தொடந்து பல தொழிற்சங்கங்களும் கோரிக்கை வைப்பதோடு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நமது ஆலையில் போது பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளாதவரை மீண்டும் பணிக்குத் திரும்புவதில்லை என ஆலை நிர்வாகத்திடம் தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித் தராதபட்சத்தில், மே 26 ஆம் தேதி காலை முதல் ஷிப்டில் இருந்து பணிக்குத் திரும்புவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.” என ரெனால்ட் நிசான் இந்தியா தொழிற்சங்கம் கூறியுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்