Aran Sei

பெரியார் சாலை பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு – நெடுஞ்சாலை துறையின் பெயர் பலகைக்கு மேல் ஸ்ட்டிக்கர் ஒட்டிய பெரியார் திராவிடர் கழகம்

சென்னை மற்றும் பூந்தமல்லிக்கு இடையேயான ஈவெரா பெரியார் சாலையானது கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்று பெயர் மாற்றப்பட்டது பெரும் விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அப்பெயருக்கு மேல், ஈவெரா பெரியார் சாலை என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் இச்சாலை உருவாக்கப்பட்டு அதற்கு கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்று பெயரிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1979-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் அச்சாலைக்கு ஈவெரா பெரியார் சாலை என்று பெயர் சூட்டினார்.

பாஜகவின் பெரியார் குளறுபடி – சுட்டும் துக்ளக்

அண்மையில், அப்பெயர் மாற்றப்பட்டு கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதனையடுத்து, திராவிடர் விடுதலை கழகத்தினர் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்ட பெயர் பலகையில் கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோட் என்ற பெயரை மட்டும் கருப்பு மை பூசி அழித்ததன் வழியாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

‘பெரியாருக்கு பதில் மோடியை தலைவராக ஏற்றுக்கொண்டதா ஈபிஎஸ் – ஓபிஎஸ் கட்சி’ – ப.சிதம்பரம் கேள்வி

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 15) இரவு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கிராண்ட் டிரங்க் ரோடு என்ற பெயருக்கு மேல், ஈவெரா பெரியார் சாலை என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்