Aran Sei

மத்திய அரசு விளம்பரங்களில் பிரதமரின் படங்கள் – 72 மணி நேரத்தில் அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

ரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மத்திய அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த வைக்கப்பட்ட பதாகைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை 72 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவானது, எரிபொருள் நிலையங்களில் உரிமையாளர்களுக்கும் எரிபொருள் முகவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற விளம்பர பதகைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தைப் பயன்படுத்துவது என்பது அமலில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறுவதாகும் என்று மேற்கு வங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடக்கும் மாநிலங்கள் – ‘ புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான காலம் குறைப்பு’ – தேர்தல் ஆணையம்

முன்னதாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குழு ஒன்று, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து, பல்வேறு மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் விளம்பர பதாகைகளில் மோடியின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது என்பது ஒட்டு மொத்த தேர்தல் விதிமுறைகளையே மீறும் செயல் என்று குற்றஞ்சாட்டியிருந்தது.

பிப்ரவரி 26-ம் தேதி, ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, அன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்