Aran Sei

நாகாலாந்து, அசாம், மணிப்பூரின் சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கம் – ஒன்றிய அரசு முடிவு

நாகாலாந்து, அசாம், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்குவதாக ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்க – நாகாலாந்து தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி வேண்டுகோள்

2021 டிசம்பர் 4 ஆம் தேதி நாகாலாந்து மாநில மோன் மாவட்டத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற குரல்கள் வேகமாக ஒலிக்க துவங்கின. இந்த பின்னணியில் தான், இத்தகைய முடிவை ஒன்றிய அரசு எடுத்துள்ளது.

1958 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டம் அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களின் “அமைதிக்குறைவான பகுதிகள்” என்று குறிப்பிடும் இடங்களில், இந்திய ஆயுத படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது.

நாகாலாந்தில் ராணுவத்தால் கொல்லப்பட்ட மக்கள் – விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கும் விசாரணைக் குழு

நாகாலாந்தில் கடந்த டிசம்பர் 31 அன்று காலாவதியான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மேலும், 6 மாதங்களுக்கு (ஜூன் 30) நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Source : indianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்