Aran Sei

அம்பேத்கர் நினைவு நாள்: மாலையிட வந்த அர்ஜுன் சம்பத்திற்கு எதிர்ப்பு

ண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி,சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு மாலையிட வந்த, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

இன்று, இந்தியா முழுவதுமுள்ள மக்கள், அண்ணல் அம்பேத்கரின் 64 வது நினைவு நாளை கொண்டாடி வருகின்றனர். இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த சிற்பி, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் வழிகாட்டி, இந்திய மானுடவியல் பேரறிஞர், பொருளாதார அறிஞர் என்று இந்திய மக்கள் அவரை நினைவு கூர்கின்றனர்.

மார்ச் மாதம் இறுதியில் கொரானா பேரிடர் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால், ஏப்ரல் மாதம் அவரின் பிறந்தநாளைக் கொண்டாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கொரானாவின் தாக்கம் குறைந்து ஊரடங்கு தளர்ந்த காரணத்தால் இன்று டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை, அடையாரில் அமைந்துள்ள ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபதில்’ அவரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் வழக்கமாக மேடை போட்டு பெரும் விழாவாக நடைபெறும், இந்த ஆண்டு கொரானா பேரிடர் காரணமாக விழா எதுவும் நடக்கவில்லை. ‘நிலா தம்மா’ குழுவைச் சேர்ந்த குழந்தைகள் பறையாட்டம் ஆடி அம்பேத்கர் குறித்த பாட்டு பாடி நடனமாடினர்.

 

மக்கள் ஒன்று கூடி டாக்டர் அம்பேத்கருக்கு நினைவஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்திருக்கிறார். மணிமண்டபத்தில் இருந்த மக்கள் அவரை உள்ளே செல்ல விடாமல் வழிமறித்துள்ளனர்.

‘நிலா தம்மா’ குழுவைச் சேர்ந்த இலக்கியன் அரண்செய் – யிடம் பேசினார் “வழக்கமாக நடைபெறும் கொண்டாட்டம் இல்லை. ஆனால், எப்போதும் போல் தலித் மக்கள் தங்களின் நன்றியுணர்வோடு பாபாசாஹிப் அம்பேத்கரை வணங்கி செல்கின்றனர். மாலை அணிவிக்க அர்ஜுன் சம்பத் வந்தபோது மக்கள் அனைவரும் எந்தவித இயக்கப்பாகுபாடு இல்லாமல் அவரின் வருகையை எதிர்த்தோம்.  பெரும் தள்ளுமுள்ளு நடந்தது, பிறகு காவல் துறை போராடியவர்களிடம் சமரசத்தில் ஈடுபட்டது“ என்று கூறினார்.

மேலும், ” மாலை அணிவிக்க வந்த ஒருவரை அனுமதிக்க மறுப்பது ஜனநாயகம் இல்லை என்று காவல்துறை தரப்பு சொன்னதால் மாலை அணிவிக்க ஒப்புக்கொண்டோம். எல்லோரையும் அனுமதிக்கவில்லை, அர்ஜுன் சம்பத் மற்றும் அவருடன் மூன்று பேரை  மட்டுமே அனுமதிதோம். இந்து மக்கள் கட்சியின் கொடியை எடுத்துச்செல்லக் கூடாது, கோஷங்கள் எழுப்பக்கூடாது என்கிறகட்டுபாடோடுதான் அர்ஜுன் சம்பத்தை மாலையிட அனுமதித்தோம்” என்று தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்