Aran Sei

நூற்றாண்டுகளுக்குப் பிறகு நினைவுகூரப்படும் அமெரிக்க இனப்படுகொலை – அதிகாரப்பூர்மாக இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர்

மெரிக்க வரலாற்றில் மிகமோசமான இன வெறுப்பு  சம்பவங்களில் ஒன்றான 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற துல்சா இனப்படுகொலையை முதல்முறையாக ஜோ பைடன் அதிகாரப்பூர்வ நினைவு கூர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணம் துல்சா பகுதியில், நடந்தப் படுகொலைகள் ஒப்பீட்டளவில் வசதியான ஆப்பிரிக்க அமெரிக்கர்களைச் சொத்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டையும் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

லட்சதீவைக் காக்க உண்ணாநிலை போராட்டத்தை அறிவித்த லட்சத்தீவைக் காப்போம் குழு: சட்டரீதியாகவும் எதிர்கொள்ள தயாரென அறிவிப்பு

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் அதிகமாக வசிக்கக்கூடிய துல்சா பகுதியில், கறுப்பினத்தனவர்கள் வால் ஸ்ட்ரீட் என அழைக்கப்பட்ட பகுதியில் 1921 ஆம் ஆண்டு மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதியில் கறுப்பின மக்களின் மீது திட்டமிட்ட வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

“இந்தியாவில் 36 லட்சம் கோடி முதலீடு செய்வதாக விளம்பரம் வெளியிட்ட நிறுவனம்” – அலுவலகம் கூட இல்லை என்பது ஆய்வில் அம்பலம்

இந்தப் படுகொலைகள் நடைபெற்று நூறாண்டுகள் கடந்த நிலையில், இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இது போன்ற சம்பவமே நடைபெறவில்லை என பாசாங்கு செய்வதால் நமக்கு எந்தப் பலனும் இல்லை. எது நல்லது, எது கெட்டது என தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெரிய நாடுகள் இதைத் தான் செய்கின்றன. அவர்கள் தங்கள் இருண்ட பக்கங்களுடன் உடன்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

துல்சா படுகொலைகுறித்து ஒரு அமெரிக்க பிரதமர் அதிகாரப்பூர்வமாக பேசியிருப்பது இதுவே முதல் முறை.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்