Aran Sei

சீக்கியர்களை அவதூறு பேசியதாக கங்கனா ரனாவத் மீது புகார் – விளக்கமளிக்க டெல்லி சட்டப்பேரவை நல்லிணக்க குழு சம்மன்

credits : the indian express

சீக்கியர்கள் குறித்து அவதூறாகவும் இழிவுப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத்திற்கு, டெல்லி சட்டபேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு சம்மன் அனுப்பியுள்ளது.

டிசம்பர் 6 ஆம் தேதி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சதா தலைமையிலான குழு முன் கங்கனா ரனாவத் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

அமைதி மற்றும் நல்லிணக்க குழுவின் துணைச் செயலாளர் கையொப்பமிட்ட அந்த நோட்டீஸில், “உங்கள் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 20.11.2021 அன்று நீங்கள் பகிர்ந்ததாகக் கூறப்படும், பதிவால் பலர் புண்பட்டதாகவும் குறிப்பிட்ட சமூகத்தினரை மோசமான முறையில் இழிவுபடுத்தியதாகவும் புகார்கள் அமைதி மற்றும் நல்லிணக்க குழுவுக்கு வரப் பெற்றோம். காலிஸ்தானி தீவிரவாதிகள் என்று சீக்கியர்களை பொத்தாம் பொதுவாக முத்திரை குத்துவது… நல்லிணக்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு, ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக புகார்கள் உள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

‘கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது?’- ஜோதிமணி எம்.பி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ளிருப்பு போராட்டம்

ஏற்கனவே, சமூக ஊடகங்களில் தங்களுக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக கங்கனா ரனாவத்தின் மீது சீக்கியர்கள் தொடர்ந்த வழக்கு  நிலுவையில் உள்ளது.

கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டா கிராம் பதிவில், “காலிஸ்தானி தீவிரவாதிகள் இன்று அரசைமுறுக்கிக் கொண்டிருக்கக்கூடும். ஆனால், ஒரு பெண்ணை மறந்துவிடக் கூடாது. அவர்களைத் தன் காலணியில் நசுக்கிய ஒரே பெண் பிரதமர். இந்த நாட்டிற்கு அவர் எவ்வளவு துன்பம் கொடுத்திருந்தாலும், தன் உயிரை விலையாகக் கொடுத்து கொசுக்களைப் போல அவர்களை நசுக்கினார்” என்று பதிவிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Source: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்