Aran Sei

மத ரீதியான பாகுபாட்டால் விடுவிக்கப்படாமல் இருக்கும் இஸ்லாமிய கைதிகள்: விடுவிக்க கோரி தமிழக முதல்வருக்கு கைதிகள் உரிமை கழகத்தினர் வேண்டுகோள்

டந்த 22 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் அவதிப்பட்டு வரும் 38 இஸ்லாமிய கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என கைதிகள் உரிமை கழகத்தின் இயக்குநர் ப.புகழேந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கோவை மத்திய சிறை, வேலூர் மத்திய சிறை, புழல் மத்திய சிறை, பாளையம்கோட்டை மத்திய சிறை, கடலூர் மத்திய சிறை என தமிழக சிறைகளில் அவதிப்பட்டு வரும்  38 இஸ்லாமிய கைதிகள் முன் கூட்டியே விடுதலை செய்யப்படும் தகுதியுடன் இருக்கிறார்கள் எனவும், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த (ஜுன் 3) நாளை முன்னிட்டு அவர்களை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மற்ற கைதிகளை சிறையிலிருந்து விடுவிப்பதிலும், இஸ்லாமிய கைதிகளை சிறையிலிருந்து முன் கூட்டியே விடுவிப்பதிலும் மதரீதியான பாகுபாடு இருப்பதாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்திய ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும்’ – கேரள சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

கடந்த 2008 ஆம் ஆண்டு, திமுக ஆட்சியின்போது, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 1405 கைதிகள் பத்தே ஆண்டுகளில், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுக அரசு அரசாணை வெளியிட்டதும், கடந்த 2018 ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியின்போது, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 1750 கைதிகள், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதாக, அதிமுக அரசு அரசாணை வெளியிட்டதும், அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இலவசமாக தடுப்பு மருந்தை பெறுவது ஒவ்வொரு இந்தியரின் உரிமை’ – அனைவரும் குரல் எழுப்ப ராஜஸ்தான் முதல்வர் அழைப்பு

கடந்த 1994 ஆம் ஆண்டு, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 20 ஆண்டுகள் சிறையில் கழித்தால் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் சிறையிலிருந்து விடுதலை செய்யலாம் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161 வது பிரிவு கூறுவதை, சுட்டிக்காட்டியுள்ள புகழேந்தி,  ”ஆனால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமியர்கள் 20 ஆண்டுகளைக் கடந்தும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்யாமல் இருப்பதற்கான ஒரே காரணம் அவர்கள் இஸ்லாமியர்கள் என்பது தான்” என்று கடிதத்தில் கூறியுள்ளார்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை உயர்வால் அதிகரிக்கும் மரணங்கள் – நேச்சர் கிளைமேட் சேஞ்ச் ஆய்வில் தகவல்

”சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் விடுவிக்கப்பட்டால் அவர்கள் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிப்பார்கள், அவர்கள் மீண்டும் எந்த குற்றச் சம்பவத்திலும் ஈடுபட மாட்டார்கள்  எனறு கைதிகள் உரிமைகள் கழகம் உறுதியளிக்கிறது” என்றும் கைதிகள் உரிமை கழகத்தின் இயக்குநர் ப.புகழேந்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்