Aran Sei

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை யூட்யூபில் வெளியிடுங்கள், வரிவிலக்கு எல்லாம் தரமுடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்

தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு வரிவிலக்கு தர வேண்டும் என்று சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்துள்ளார்.

மதவெறியை தூண்டும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை அரசியல் லாபத்திற்காக விளம்பரப்படுத்தும் பாஜக – சந்திரசேகர் ராவ் விமர்சனம்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என பாஜக விரும்பினால், அப்படத்தின் இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி அதை யூட்யூபில் வெளியிட வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள பாஜகவினர் ஒவ்வொரு தெருக்களிலும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கான சுவரொட்டிகளை ஓட்டுகிறார்கள். இதற்காகத்தான் நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களா? என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவினர் தங்களது அறிவை திறந்து சிந்தியுங்கள். காஷ்மீரி பண்டிட்டுகளின் பெயரில் சிலர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்காக உங்களைச் சுவரொட்டிகளை ஓட்டச் சொல்கிறார்கள். உங்களை ஆட்டு மந்தைகளைப் போல நடத்துகிறார்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மதக்கலவரத்தை தூண்டும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை தடை செய்ய வேண்டும் – ஒன்றிய அரசை வலியுறுத்திய நாராயணசாமி

உத்தரபிரதேசம், பீகார், உத்தரகண்ட், சண்டிகர் மற்றும் இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த திரைப்படம் ஏற்கனவே வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : indianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்