Aran Sei

பெகசஸ் விவகாரம் எதிரொலி : “எல்கர் பரிஷத் வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும்“ – முன்னாள் காவல்துறை அதிகாரிகள்

ல்கர் பரிஷத் வழக்கில் எவ்வாறு 16 கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை பெகசஸ் விவகாரம் அம்பலப்படுத்துவதாக ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம், டெல்லி பல்கலைகழகத்தின் பேராசிரியர் அபூர்வானந்த் ஒருங்கிணத்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் (முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜுலியோ பிரான்சிஸ் ருபெரியோ, முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் விகாஷ் நரேய்ன் ராய், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் சர்வான் ராம் தாராபுரி) , பெகசஸ் மென்பொருளால் பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கண்காணிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த சந்திப்பில் பேசிய பேராசிரியர் அபூர்வானந்த், ”நமது தனியுரிமை ஆபத்தில் உள்ளது, யார் நமது நடவடிக்கைகளை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. நாடாளுமன்றமும் செயல்பட வேண்டிய விதத்தில் செயல்படவில்லை, எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க மறுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மற்றும் குஜராத்தின் டிஜிபியாக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜுலியோ பேசுகையில், ”எல்கர் பரிஷத் வழக்கில் அநீதியாக நடந்தது போல, எந்தவொரு நபரும் செய்யாத குற்றத்திற்காக கைது செய்யப்பட கூடாது. குற்றம் நிருபீக்கப்பட்டால் மட்டுமே தண்டனை எனும் ஆரோக்கியமான கொள்கையை நாங்கள் பின்பற்றினோம்.  இது போன்ற செய்யாத குற்றத்திற்காக கைது நடவடிக்கைகள் தொடர்ந்தால், மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்து விடுவர்” என கூறியுள்ளார்.

மேலும், ”எல்கர் பரிஷத் வழக்கில் காவல்துறை மேற்கொண்டுள்ள விசாரணையில் இரண்டு சந்தேகம் எழுகிறது. முதலில், அர்சினல் அமைப்பு வெளியிட்ட தகவல்கள், இரண்டாவது பெகசஸ் மென்பொருள் விவகாரம். எனவே, பெகசஸ் மென்பொருள் வழியாக எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கவர்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டு போலியான தகவல்கள் வைக்கப்பட்டதா என விசாரிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த, முன்னாள் டிஜிபி விகாஷ் நரேய்ன் ராய், ”ஒட்டு கேட்கவோ அல்லது கண்காணிக்கவோ அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், ஒருவருடைய கணிணியையோ அலைபேசியையோ ஹேக் செய்து பொய்யான தகவல்களை ஒருவரின் தொலைபேசியில் வைப்பது திட்டமிட்ட குற்றமாகும். அதை காவல்துறையோ, உளவுப்பிரிவோ யார் செய்தாலும் தவறு தான். தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) மீது சந்தேகம் தொடர்ச்சியாக வலுத்து வந்தாலும், என்ஐஏ அதை தெளிவுப்படுத்த மறுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பழங்குடியின செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி, பிணை கொடுக்கப்படாமல் உயிரிழிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய பதிவுகள்:

‘கொரோனாவால் 42% முதியவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்பு’ – ஏஜ்வெல் அறக்கட்டளை ஆய்வில் தகவல்

பெகசிஸ் விவகாரம் : பஞ்சாப் மனித உரிமைச் செயற்பாட்டாளர் வேவு பார்க்கப்பட்டது ஆம்நெஸ்ட்டி ஆய்வில் உறுதி

பெகசிஸ் தொடர்பாக பதிலளிக்க மாநிலங்களவையில் எழுப்பப்பட்டுள்ள கேள்வி – அனுமதியளிக்க கூடாது என அரசு கடிதம்

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்