Aran Sei

‘கடலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துக – மருத்துவர் மற்றும் மாணவர் சங்கங்கள் போராட்டம்

டலூரில் உள்ள அரசு  மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் பேசிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தற்போது அரசு பல் மருத்துவ கல்லூரியாக மாறி இருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணத்தைப் பெறாமல் தனியார் கல்லூரிக்கு நிகராக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற அரசு கல்லூரிகளில் இருப்பதைப் போன்று கல்வி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – சிபிஎம் கருத்தரங்கில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

கல்லூரி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக ஹால் டிக்கெட் தர மறுத்து, தேர்வுகளை எழுதவிடாமல் இக்கல்லூரிகளின் நிர்வாகங்கள் தடுக்கும் போக்கை தமிழ்நாடு அரசு நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கல்லூரிகளின் நிர்வாகங்கள் மாணாக்கர்களை பழிவாங்குவதை, மிரட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

இப்போராட்டத்தை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் (DASE), தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் (TNMSA), கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சங்கம் & பெற்றோர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைத்துள்ளனர்.

*******************                 ***************************                               *****************************

டாணாக்காரன் திரைப்படத்தின் இயக்குநர் தமிழ், திரைக்கலைஞர்கள் பாவல் நவகீதன், பிரகதீஸ்வரன் அவர்களின் நேர்காணல்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்