Aran Sei

கொரோனா காலத்தில் இந்தியாவில் 200,000 க்கும் மேற்பட்ட அகதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் – உரிமைகளுக்கான குழுக்களின் சர்வதேச கூட்டமைப்பு அறிக்கை

கொரோனா காலத்தில் இந்தியாவில்  குறைந்தபட்சம் 200,000 க்கும் மேற்பட்ட அகதிகள் இலவச மருத்துவவசதி மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற இயலாமல் மோசமாக பாதிப்படைந்துள்ளதாக உரிமைகளுக்கான குழுக்களின் சர்வதேச கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமியர் அல்லாத அகதிகள் மட்டுமே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாமென உத்தரவிட்ட ஒன்றிய அரசு – அரசியலமைப்பிற்கு எதிரானது எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

மேலும், அவர்கள் அரசு வழங்கியுள்ள எந்த நிதி உதவிகளையம் பெறவில்லை என்றும், அதற்கான வங்கிக்கணக்குகள் அவர்களிடம் இல்லை என்றும், “கொரோனா தொற்று நிலையற்ற மக்கள்மீதான தாக்கம் மற்றும் மாற்றத்திற்கான ஒரு வரைபடம்” என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

ஐரோப்பிய நாட்டைச் சார்ந்த அந்த அமைப்பு இந்தியா உட்பட 13 நாடுகளில், அகதிகள் நிலை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளதாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்முகாஷ்மீரில் தடுப்புக்காவல் முகாமில் இருந்த ரோஹிங்கிய அகதி மரணம் – கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகும் அகதிகள்

மேலும், உலகம் முழுவதும் கிட்டதட்ட, 15 மில்லியன் நாடற்ற அகதிகள் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கென்யா, பங்களாதேஷ், மலேசியா போன்ற நாடுகளை சேர்ந்த அகதிகளின் நிலையை மையமிட்டு நடத்தப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய ஒன்றிய அரசு 800 மில்லியன் அகதிகளுக்கு, இலவச உணவுப்பொருட்கள் வழங்குவதாக கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்ததாகவும், ஆனால் போதிய அடையாள ஆவணங்கள் இல்லாததால் மருத்துவ வசதிகளும், இலவச ரேஷன் பெற முடியவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோகிங்கியா அகதிகள் – ஜம்மு கைதுகளை எதிர்த்து டெல்லியில் ஐ.நா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை பதிவேடு வெளியிடப்பட்ட பிறகு, அசாம் வடகிழக்கு மாகாணங்களில் 125,000 அகதிகள் உள்ளதாகவும், 40,000க்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறியுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்