Aran Sei

சோவியத் செம்படையில் பணிபுரிந்த ராணுவ வீரர் மரணம் – ஒரு பக்க நுரையீரலை இழந்த போதும் வதைமுகாம்களிருந்து மக்களை மீட்டவர்

சோவியத் ராணுவத்தின் செம்படையில் பணிபுரிந்த போர்வீரரும், ஹிட்லரின் வதைமுகாமிலிருந்து மக்களை மீட்டவருமான டேவிட் தஷ்மான் கடந்த ஜூன் 5 தனது 98 வயதில் உயிரிழந்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 27, 1945, தஷ்மான் சோவியத் ராணுவத்தின் டாங்கியை பயன்படுத்தி நாஜி முகாமின் மின் வேலையை உடைத்து, அங்குச் சிறைவைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுவித்ததாக அந்த செய்தி கூறுகிறது.

‘மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கன்வெர்ஷன் தெரப்பி செய்யும் மருத்துவப் பணியாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’ – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

டேவிட் தஷ்மான் 1941 ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் செம்படையில் இணைந்ததாகவும், , ராணுவத்தில் செயல்பட்டபோது ஏற்பட்ட காயத்தில் அவரது ஒரு பக்க நுரையீரல் நீக்கப்பட்டதாகவும் தி வயர் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், இவர் மிகச்சிறந்த வாள்சண்டை வீரராகவும் செயல்பட்டுள்ளதாகவும், நுரையீரல் நீக்கப்பட்ட பிறகும் வாள்சண்டை போட்டியிட்டு ரஷ்ய சாம்பியனாக வென்றுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்கக்கூடாது – தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்

அதுமட்டுமல்லாது, இரண்டாம் உலகப் போரில் 12,000 சோவியத் டாங்கி மீதான தாக்குதலுக்கு பின் உயிர்பிழைத்த 69 பேரில் தஷ்மானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்