Aran Sei

கடந்த ஆண்டு 227 சூழல் செயற்பாட்டாளர்கள் படுகொலை – குளோபல் விட்னஸ் அமைப்பு அறிக்கை

டந்த 2020 ஆம் ஆண்டு உலகெங்கும்  227 சூழல் செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குளோபல் விட்னஸ் என்ற அமைப்பின் அறிக்கையின் வழியாக தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள்  நிலவுரிமை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க போராடியவர்கள்  என்றும் அந்த அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் -எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

கடந்த ஆண்டு இப்பட்டியலில் 8ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது  10ஆவது இடத்தில் உள்ளது.மேலும்,  2020ஆம் ஆண்டு  இந்தியாவில் 4 சூழல் செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதிகபட்சமாக  கொலம்பியாவில் 65பேரும் மெக்சிகோவில் 30 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் 29 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குளோபல் விட்னஸ் எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலகெங்கும் நடக்கும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் அதில் கொல்லப்பட்டவர்கள் குறித்து ஆண்டறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்துக்களின் ரேஷன் பொருட்களை இஸ்லாமியர்கள் உண்டு செரித்து விட்டனர் : சர்ச்சையில் சிக்கிய யோகி ஆதித்யநாத்

இந்நிலையில், சுரங்கப் பணிகள், அணைக் கட்டுமானப் பணிகள், வேட்டைத் தடுப்பு, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை, காடுகளை அழிக்கும் தனியார் நிறுவனங்கள், அரசாங்கங்கள் ஆகியவற்றை எதிர்த்து நேரடியாக களத்தில் போராடியவர்கள்,மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றவர்களை அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் கொன்று வரும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வருகின்றது.

மேலும்,  கொல்லப்பட்டவர்களில் பத்தில் ஒருவர் பெண் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் 212பேர் கொல்லப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.

மேலும் மூன்றில் ஒரு பங்கு தாக்குதல்கள் பூர்வகுடி மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்தாண்டில் மட்டும் 28 அரசு அதிகாரிகள், வனப்பாதுகாவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், பெண் செயற்பாட்டாளர்கப் கொல்லப்பட்ட எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கூட சூழல் பாதுகாப்பில் ஈடுபட்ட பல்வேறு பெண்கள் மீது பாலினம் சார்ந்த அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Last line of defence report

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்