Aran Sei

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிணை வழங்கப்பட்ட ஐஐடி மாணவர் – நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய முன்னாள் மாணவர்கள் கோரிக்கை

வுஹாத்தி ஐஐடியைச் சேர்ந்த மாணவருக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் பிணை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மாணவரை மாநிலத்தின் ‘எதிர்கால சொத்து’ எனக் கூறி கவுஹாத்தி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளின் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் பொது அறிக்கையில், “இது போன்ற உத்தரவுகள் நீதிமன்றங்களில் நீதிக்காக காத்திருக்கும் பலரின் நம்பிக்கையைப் பறிக்கக்கூடும். பல்கலைக்கழக வளாகங்களை பாதுகாப்பு அற்ற சூழல்களாக மாற்றி விடும்.” என்று தெரிவித்துள்ளனர்.

கவுஹாத்தி நீதிமன்ற தீர்ப்பின் மீதான அதிருப்தி மற்றும் வெறுப்புடன் இதை எழுதுவதாக அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

பிணை உத்தரவு வழங்கிய நீதிபதி போர் தாக்கூர், மார்ச் 13 ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக பூர்வாக ஆதாரங்களை இருப்பதாக தெரிவித்திருந்ததை அவர்களை அந்த அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளனர்.

பாலின சமத்துவம் மற்றும் நீதியில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என்ற கருத்தை அச்சுறுத்தும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது என அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

”பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இது போன்ற ’சலுகைகள்’ குற்றங்களின் தீவிரத்தை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்றும், இத்தகைய செயல்களில் இருந்து தப்பிக்க முடியும்’ மற்றும் ‘பிரகாசமான எதிர்காலத்தை’ எதிர்நோக்குகின்றன என்ற கருத்தை வலுப்படுத்துகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”எந்த அளவிளான அறிவு, திறமை மற்றும் நற்பெயரும் குற்றம்சாட்டப்பட்டவர்களை சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுக்காகவோ அல்லது அந்த நடவடிக்கைகள் குறைக்கப்படுவதற்கு காரணமாகவோ இருக்கக் கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களின் வழக்குகளில் இவை எந்த நிவாரணத்திற்கு ஒரு காரணமாக இருக்க முடியாது” என அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

கவுஹாத்தி ஐஐடி வளாகத்தில் மார்ச் 28 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரை ஏப்ரல் 3 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். மாநிலத்தின் ‘எதிர்கால சொத்து’ எனக் கூறி ஆகஸ்ட் 23 ஆம் தேதி அவருக்குப் பிணை வழங்கிக் கவுஹாத்தி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Source : The Wire 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்