Aran Sei

கடந்த மாதம் 31,637 கணக்குகள் முடக்கம் – புகார்களின் மீது ட்விட்டர் நிர்வாகம் நடவடிக்கை

டந்த ஜூன் 26 முதல் ஜூலை 25 வரை, 120 புகார்கள் பெறப்பட்டதாகவும் அதுகுறித்து 167 இணைய முகவரிகள் [URL]   மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தக் காலக்கட்டத்தில் 31,637 கணக்குகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக   அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது , துஷ்பிரயோகம்/துன்புறுத்தல் (36), தவறான தகவல் மற்றும் ஊடகத்தை தவறாகப் பயன்படுத்துதல்  (28), அவதூறு  ( 13), வெறுக்கத்தக்க நடத்தை (12), ஆள்மாறாட்டம் (8),  வயதுவந்தோர் உள்ளடக்கம் (5), தனியுரிமை மீறல் (4) ) மற்றும் பயங்கரவாதம்/வன்முறை தீவிரவாதம் (1) போன்ற காரணங்களால் நீக்கப்பட்டுள்ளதாகவும் ட்விட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.

இந்தியாவில் ஏறத்தாழ 1.5 கோடி பேர் ட்விட்டர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

source: தி இந்து

தொடர்புடைய பதிவுகள்:

பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக- மக்களுக்கு எதிரானதென அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்துத்துவர்கள் கைது – நீண்ட காலமாக செயல்பட்டது ஆய்வில் அம்பலம்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்