Aran Sei

குதுப் மினார் வளாகத்தில் இடிக்கப்பட்ட இந்து கோவில்களை மீண்டும் கட்ட வேண்டும் – விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை

Credit: PTI

குதுப் மினார் வளாகத்தில் உள்ள பழமையான கோவில்களை மீண்டும் கட்ட வேண்டும் மற்றும் அங்கு இந்து மத சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.

1993 ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட குதுப் மினார் வளாகத்தை விஎச்பியின் தேசிய செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் உள்ளிட்ட தலைவர்கள் குழு பார்வையிட்டபிறகு இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்து ராஷ்ட்ரா – இந்துஃபோபியா; ஒன்றிய அரசின் இரட்டை சவாரிக்கான காரணம் என்ன? – மு.அப்துல்லா

”நாங்கள் இந்த வளாகத்தின் முக்கிய பகுதிகளுக்குச் சென்றோம். இங்கு இருக்கும் இந்து கடவுள்களின் நிலையைப் பார்க்கும் போது மனம் கணக்கிறது. 27 இந்துக் கோவில்களை இடித்துப் பெற்ற பொருட்களை கொண்டு குதுப் மினார் கட்டப்பட்டுள்ளது. நாட்டை இழிவு செய்வதற்காகவே இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது” என்று பன்சால் தெரிவித்துள்ளார்.

”கடந்த காலத்தில் இங்கு இடிக்கப்பட்ட 27 இந்துக் கோவில்களையும் புணரமைத்து, அங்கு இந்துக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக குதுப் மினார் வளாகத்திற்குள் விநாயகர் சிலைகள் அவமரியாதையான முறையில் வைக்கப்பட்டிருப்பதாக தேசிய அருங்காட்சியகத்தின் தலைவரும் பாஜகவின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினருமான தருண் விஜய் தெரிவித்திருந்தார்.
ஒரு வருடத்திற்கு முன்பே இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) எழுதப்பட்ட கடிதத்திற்கு, இதுவரை பதில் வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

உ.பி, மாயாவதியை முதல்வர் வேட்பாளராக்கி கூட்டணி அமைக்க பேசினோம், அவர் பதிலளிக்கவில்லை – ராகுல் காந்தி தகவல்

”தருண் விஜய் இது தொடர்பாக ஏஎஸ்ஐக்கு கடிதம் எழுதியுள்ளார். அரசும் சம்பந்தப்பட்ட துறைகளும் இந்த பிரச்னையில் தீவிரமாக சிந்தித்து இந்து சமுதாயத்தின் மரியாதையை மீட்டெடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று வினோத் பன்சால் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் விஎச்பியின் எதிர்கால நடவடிக்கை குறித்து கேட்ட போது, மூத்த தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும். தேவை ஏற்பட்டால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசிலிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் சுற்றுலாத்தளத்தின் இணையதளத்தில், 73 மீட்டர் உயரமுள்ள குதுப் மினார், டெல்லியின் கடைசி இந்து சாம்ராஜ்ஜியம் தோல்வியடைந்த பிறகு அங்கு இருந்த 27 கோவில்களை இடித்து கிடைத்த பொருட்களை கொண்டு கட்டப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், குதுப் மினாரில் உள்ள குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியின் கிழக்கு வாயிலில் ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளதாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: The New Indian Express

நான் வரைந்த ஓவியத்தைத்தான் A.R.Rahman பகிர்ந்தார். ஓவியர் சந்தோஷ் நாராயணின் நேர்காணல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்