Aran Sei

அறம் சீறும்; சனாதனம் வீழும் – தேர்தல் முடிவு குறித்து திருமாவளவன்

”சனாதன சக்திகளை வீழ்த்தி, அவர்களை தமிழகத்தில் இருந்து விரட்டியடிப்பதில் தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் (கூட்டணி), அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (கூட்டணி), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (கூட்டணி), நாம் தமிழர் (தனித்து போட்டி), மக்கள் நீதி மய்யம் (கூட்டணி) ஆகிய கட்சிகளுக்கிடையேயான ஐந்து முனை போட்டி நடைபெற்றது.

தேர்தல் ஆணையம் அறிவித்தப்படி, இன்று (மே 2) வாக்கு எண்ணிக்கை நடைபெற தொடங்கியது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில், தற்போதைய நேரப்படி (3.00 PM) திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 137 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

மனுநீதி எதிர்ப்பு : திருமாவுக்குப் பெருகும் ஆதரவு

திமுக தலைமையிலான கூட்டணியில் இந்தத் தேர்தலைச் சந்தித்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆறு இடங்களில் போட்டியிட்டு  மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தமிழக தேர்தல் களத்தில், சனாதன சக்திகளுக்கு எதிராகவும், அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக தலித மக்களை ஒன்றிணைப்பதிலும், முதன்மையான பங்கை விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மனுதர்மத்தை அம்பேத்கரும் கொளுத்தினார் – ஆனந்த் டெல்டும்டே

”சனாதன சக்திகளை வீழ்த்தி, அவர்களை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்பதில் தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது” என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான மனுஸ்மிருதியைத் தடைசெய் – திருமாவளவன்

மேலும், ”பாஜகவை அம்பலப்படுத்துவோம்” எனவும் ”சனாதன சக்திகளை வீழ்த்துவோம்”  எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்