Aran Sei

மத்திய அரசு அழைத்தால் மீண்டும் பேச்சு வார்த்தைக்கு தயார் – ராகேஷ் திகாயத்

த்திய அரசு அழைத்தால் மீண்டும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தயார் என பாரதிய கிசான்(பிகேயூ) சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் தெரிவித்துள்ளார். ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்ற கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் வைக்கப்பட்ட நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் பேச்சுவார்த்தையை மத்திய அரசு தொடர விரும்பினால், சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என திகாத் தெரிவித்துள்ளார்.

கொரோனா அடைப்பை எதிர்த்த போராட்டம் பற்றிய காணொளி – சேனலை முடக்கியது யூடியூப்

”ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விட்ட இடத்தில் இருந்தே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும். மூன்று சட்டங்களும் திரும்பப் பெற வேண்டும், பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்கச் சட்ட இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை.” என ராகேஷ் திகாத் கூறியிருப்பதாகப் பிகேயூ ஊடக பொறுப்பாளர் தர்மேந்திர மாலிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அச்சமிருப்பதால், விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு மத்திய வேளான் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை ஹரியான உள்துறை அமைச்சர் அணில் விஜ் வலியுறுத்தியிருக்கும் நிலையில், பிகேயூ தேசிய செய்தி தொடர்பாளரின் இந்த அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்