Aran Sei

ஸ்விகி, சோமாட்டோ நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படலாம் – ஆலோசனைக் குழு பரிந்துரை

ஸ்விகி, சோமாட்டோ மற்றும் கிளவுட் கிச்சன் போன்ற உணவு டெலிவரி செய்யும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கலாம் என ஜிஎஸ்டி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையை வெள்ளி (செப்டம்பர் 17) நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யவுள்ளது.

வரி விதிப்பு தொடர்பாக ஆலோசனை குழு அளித்திருந்த பரிந்துரையில், செயலிகள் மற்றும் இணையதளங்கள் மூலமாக உணவு  வினியோகம் செய்பவர்களையும் உணவகமாகக் கருதி ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உணவகங்களுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்தப் புதிய நடைமுறை தொடங்கும் பட்சத்தில், உணவு விநியோகப் பயன்பாடுகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்யும் அளவிற்கு உணவு விநியோகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பதிவு செய்யப்படாத நிறுவனங்களால் இந்த வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது.

பல உணவகங்கள் ஜிஎஸ்டி வரி செலுத்துவதில்லை. மேலும், பல சிறிய உணவகங்கள் பதிவு செய்யப்படவில்லை. சிறிய உணவகங்களின் வரியைப் பெரிய உணவகங்களிடம் இருந்து பெறலாம் என ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலமாக 2020-21 காலகட்டத்தில், ரூ 2 ஆயிரம் கோடி அளவிலான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது.

ஸ்விகி, சோமோட்டோவில் உணவு விநியோகம் செய்ய பதிவு செய்யப்பட்ட உணவகங்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லாததால், பதிவு செய்யப்படாத உணவகங்கள்மூலம் உணவு விநியோகம் செய்யப்படுகின்றன.

உணவு விநியோகம் செய்வதற்கான சமையல் கூடமாக செயல்படும் கிளவுட் கிச்சன்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

Source : Deccan Herald 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்