Aran Sei

கொரோனாவினால் வேலையை இழந்த 40% பேர் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறயிவில்லை- லண்டன் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் தகவல்

ந்தியாவில் கொரோனாவினால் வேலையை இழந்த 40 விழுக்காடு பேர் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெற இயலவில்லை என்று லண்டன் பல்கலைகழகத்தின் வணிகம் மற்றும் அரசியல் அறிவியல் துறையைச் சார்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரகண்ட், பீகார், ஜார்கண்ட் பகுதியில் 150 பகுதிகளில் 4800 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இவ்வாறு அறிய வந்துள்ளதாகவும், மேலும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 4673 பேரில் 12 பேருக்கு மட்டுமே ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கணக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

‘சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு’: பதவியை ராஜினாமா செய்த பேராசிரியர் – விசாரணை நடத்த மாணவர் சங்கம் கோரிக்கை

மேலும், இந்தியாவை கொரோனா வந்து ஒரு வருடத்தைக் கடந்துள்ள நிலையில், எண்ணற்றோர் வேலை இல்லாமல், வேலைக்கான ஊதியம் வழங்கப்படாமலும், நீண்டகாலமாக வேலைவாய்ப்பின்றி உள்ளதாகவும், அதில் 40% பேர் கடந்த 10 மாதங்களாக எவ்வித ஊதியமும் பெறவில்லை அல்லது வேலைவாய்ப்பற்று உள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

இதுகுறித்து தெரிவித்துள்ள ஆய்வாளர் திங்க்ரா, “முறைசாரா வேலைவாய்ப்பில் உள்ள இளம் தொழிலாளர்கள், நீண்டகால வேலையின்மை ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளனர். இது அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் சம்பாதிக்கும் வாய்ப்புகள் மற்றும் அவர்களின் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் வாழ்நாள் முழுவதும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும், மேலும் இது அவர்களின் சமூகங்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் ”என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்