இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதுகலை பயிற்சி மருத்துவர்களுக்கு மிகக் குறைந்த உதவித்தொகையைப் பெறுகிறார்கள் என்றும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதுகலை பயிற்சி மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடர்பாக, இன்று (மே 17), முதுகலை பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசிற்கு தமிழ்நாடு முதுகலை பயிற்சி மருத்துவர்கள் சங்கம் தனது டிவிட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளது. “எங்கள் பணிசுமையையும் சமுதாயத்திற்கான சேவைகளையும் தயவுசெய்து பரிசீலிக்கவும். நாங்கள் இந்தியாவிலேயே மிகக் குறைந்த உதவித்தொகையைப் பெறுகிறோம். நாங்கள் அதிகமாக வேலை செய்கிறோம். ஆனால், குறைந்த உதவித்தொகையையே பெறுகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
RDA TAMIL NADU REQUESTING TN GOVERNMENT FOR STIPEND HIKE FOR NON SERVICE PG'S,KINDLY CONSIDER OUR WORKLOAD AND SERVICES FOR THE SOCIETY. We are getting the least stipend in india.WE ARE OVERWORKED AND UNDERPAID.@RAKRI1 @Subramanian_ma @mkstalin @CMOTamilnadu @TNDME1 pic.twitter.com/2ihVlnQ5Te
— Tamil Nadu Resident Doctors Association (@NaduDoctors) May 17, 2021
அந்த டிவீட்டுடன், மாநில வாரியாக முதுகலை பயிற்சி மருத்துவர்கள் பெரும் உதவித்தொகையை குறிக்கும் வரைப்படத்தையும் இணைத்துள்ளனர்.
அதில், அதிகபட்ச உதவித்தொகை குஜராத் மாநிலத்திலும், குறைந்தபட்ச உதவித்தொகை தமிழகத்திலும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.