Aran Sei

ஏடிஎம் பரிவர்த்தனைக்கான கட்டணம் உயர்வு – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி

டிஎம் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணத்தை ரூ. 20ல் இருந்து ரூ. 21 ஆக உயர்த்திக் கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றிற்கு ஏற்பட்டிருக்கும் கூடுதல் செலவீனங்களை சமாளிக்கும் விதமாக வங்கிகளுக்கு இடையிலான பரிமாற்ற கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டாக்டர்கள் இறைதூதர்கள், கடவுளின் வரப்பிரசாதம்; அவசர சிகிச்சை அலோபதிதான் சிறந்தது’ – பாபா ராம்தேவ்

“இதன்படி வங்கிளுக்கு இடையிலான நிதி பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ. 15ல் இருந்து ரூ.17 ஆகவும்,  நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் ரூ. 5ல் இருந்து ரூ. 6 ஆகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஆகஸ்ட் 1, 2021 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சொந்த கட்சியின் பணத்தையே திருடிய கேரள பாஜக; அவிழும் உண்மைகள் – ராஜீவ் ராமச்சந்திரன்

”பரிமாற்று கட்டணம் மற்றும் பொது செலவுகள் அதிகரிப்பதை ஈடு செய்ய வங்கிகள்,  ஏடிஎம் பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கான சேவைக் கட்டணத்தை ரூ. 21 ஆக உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 1, 2022 ஆம் ஆண்டும் மூலம் நடைமுறைக்கு வரும்” என அந்த அறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்