Aran Sei

தாட்கோ கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் வேண்டுகோள்

தாட்கோ வழியாக ஆதிதிராவிடர்கள்  பெற்றக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”புதுச்சேரி மாநில ஆதிதிராவிடர் புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையம்  பெற்ற கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக புதுச்சேரி முதலமைச்சர் இன்று[ஆகஸ்ட் 28] அறிவித்துள்ளார்”. என்று கூறியுள்ளார்.
மேலும், இதனைப்போன்று தமிழ்நாட்டில் தாட்கோ  மூலம் ஆதிதிராவிடர் பெற்ற கடன்களைத் தள்ளுபடிசெய்ய என  தமிழ்நாடு முதலமைச்சருக்கு
அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 19 அன்று விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் திருமாவளவனும், “தாட்கோ கடன்களை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்