Aran Sei

பதினான்கு ஆண்டுகள் சிறைவாசம் முடித்தோரை விடுதலை செய்ய வேண்டும் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்

தினான்கு ஆண்டுகள் சிறைவாசம் முடித்தோரை விடுதலை செய்ய வேண்டுமெனவும்,
7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு புதிய அறிவுரையை வழங்க வேண்டுமெனவும், எதிர்காலத்தில் உறுப்பு 161 ன் கீழ் முடிவெடுப்பது தொடர்பாகக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த சிறைவாசிகளை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை’ என உச்சநீதிமன்றம் கடந்த 03.08.2021 அன்று அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்”  என  ரவிக்குமார்  வலியுறுத்தியுள்ளார்.

‘பெகசிஸ் குறித்து விவாதிக்காமல் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்’ – நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந் சாவந்த்

மேலும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மாநில அரசுகள் பயன்படுத்தக்கூடியதே தவிர ஆளுநர் தன்னிச்சையாக அதைப் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது என்றும் , தண்டனைக் குறைப்பு தொடர்பாக மாநில அரசின் அறிவுரை ஆளுநரைக் கட்டுப்படுத்தும் என்றும் தெளிவு படுத்தியுள்ளது என்றும், தண்டனைக் குறைப்புச் செய்ய ஒவ்வொரு சிறைவாசிக்கும் தனித்தனி ஆணை தேவையில்லை, பொதுவாக வழங்கப்படும் ஆணை அது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, “தண்டனைக் குறைப்பு செய்யப்படும் நபர் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்திருந்தால் அவரை விடுவிப்பதற்கு மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம் , அவர் ஒரு வேளை 14 ஆண்டுகள் சிறை வாசத்தை முடிகாது இருந்தால் உறுப்பு 161 இன் கீழ் அவரை விடுவிப்பதற்கு ஆளுநருக்கு அறிவுரை வழங்கலாம் என்று தெளிவாகக் கூறியுள்ளது” என்றும் ரவிக்குமார் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்வதாக உறுதியளித்து பாலியல் சுரண்டலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்ற வேண்டும் – அலகாபாத் உயர்நீதிமன்றம்

மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டுமெனத் தமிழ்நாடு அரசு அளித்த அறிவுரையைத் தமிழ்நாடு ஆளுநர் நிறைவேற்றாமல் காலதாமதம் செய்ததும், பின்னர் அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் சட்டவிரோதம் என்பதை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின்மூலம் தெளிவாக அறியமுடிவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிகாட்டியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார். அதில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ள 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையைப் பொருத்த அளவில் அது அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன்கீழ் வருவதால் அவர்களை விடுவிக்குமாறு ஆளுநருக்குப் புதிதாக அறிவுரை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

மேலும்,  அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீழ் தண்டனைக் குறைப்புச் செயுய்யவேண்டுமென எதிர்காலங்களில் வரும் முறையீடுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஒரு கொள்கையை உருவாக்கி எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்  ரவிக்குமார் தமிழ்நாடு முதமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்