Aran Sei

அனைத்துத் தரப்பினரும் வழிபடும் கிராமக்கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்

னைத்துத் தரப்பினரும் வழிபடும் கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெறுகிற கிராமக் கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம்’ என விதிகளில் திருத்தம் கொண்டு வரவேண்டுமென இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிற்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பட்டியல் வகுப்பில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: மீண்டும் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் விழுக்கம் கிராமத்தின் ஏரிக்கரையில் உள்ள செல்லியம்மன் கோயிலில் ஆதிதிராவிடர்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகவும், தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாகப் பின்வரும் கோரிக்கைகளையும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் பரிசீலனைக்கு முன்வைத்துள்ளார்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் படுக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் – ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள்

அவை; “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில் பணியாற்றும் கிராமக் கோயில் பூசாரிகளின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் கிராமக்கோயில் பூசாரிகள் நல வாரியம் அமைத்து அரசாணை(நிலை) 72, தமிழ் வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநிலையத்துறை, நாள்.15.3.2001-ல் ஆணையிடப்பட்டது. தற்போது 4000 பூசாரிகளுக்கு மாதம் 3000/- ரூபாய் ஓய்வூதியமும் அவர்களது குடும்பத்தினருக்குப் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லது,”இவ்வாரியத்தின் விதிமுறைகளின்படி 9 அலுவல்சாரா உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசால் நியமனம் செய்யப்படுகிறார்கள். இவ்வாரியத்தில் உறுப்பினராக ஆவதற்கு ’அந்தக் கோயில் அனைவரும் வழிபடும் திருக்கோயிலாக இருத்தல் வேண்டும் என வழிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது’

‘சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்க சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும்’ – ஒன்றிய அரசுக்கு ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள்

அதைப்போலவே கிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான தகுதியிலும், ’அந்தப் பூசாரி பணிபுரிந்த கோயில் அனைத்துத் தரப்பினரும் வழிபடும் கோயிலாக இருக்க வேண்டும்’ என்ற விதியைச் சேர்த்தால் சமூகத் தடைகள் அகற்றப்பட்டுத் திருக்கோயில்களில் சமத்துவம் ஏற்பட உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “தாங்கள் அமைச்சர் பொறுப்பேற்றதும் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களுக்குச் சொந்தமான உடமைகளை மீட்பதில் உடனடியாகக் கவனம் செலுத்தி சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்டிருப்பது பாராட்டுக்குரியது. அறநிலையத்துறைக்கு உட்படாத கிராமக் கோயில்கள் பலவற்றுக்கும் அப்படி நிலங்கள் சொத்துகள் உள்ளன. அவற்றை ஆங்காங்கே பலர் ஆக்கிரமித்துள்ளனர். அவற்றையும் மீட்பதற்குத் தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, திண்டிவனம் வட்டம் விழுக்கம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலை ஆய்வு செய்து, அங்கு அனைத்துத் தரப்பினரும் எப்போதும்போல வழிபடுவதற்கு ஏதுவாக இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் அக்கோயிலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன் என்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிற்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்