Aran Sei

பட்டியல் வகுப்பில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: மீண்டும் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்

ம்ஜிஆர் பிறப்பித்த கலப்புத் திருமணம் செய்துகொண்டோருக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை ஆணையை, மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள்.

இது தொடர்பாக, இன்று (ஜூன் 8), அவர் தமிழ் நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களையும் சேர்த்துத் தமிழக அரசு 1986 ஆம் ஆண்டில் ஆணையிட்டுள்ளது.” என்று நினைவூட்டியுள்ளார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து வதந்தி கிளப்பிய பெண்: வழக்குப் பதிய தேர்தல் ஆணையம் உத்தரவு

2006 முதல் 2011 வரை அன்றைய திமுக ஆட்சியின் போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட 287 பேர் நியமனம் பெற்றுள்ளனர் என்றும், ஆனால் கடந்த 5 ஆண்டுகளாகக் கலப்புத் திருமணம் செய்து கொண்ட எவரும் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவில்லை என்றும் ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தைக் கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. சமூக நீதியில் அக்கறை கொண்ட தங்களது தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உரிய ஆணையை வழங்குமாறு வேண்டுகிறேன்.” என்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்