Aran Sei

கோவிட் ஷீல்டு தடுப்பு மருந்து கால இடைவெளியைக் குறைக்கவேண்டும் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்

கோவிட் ஷீல்டு தடுப்பு மருந்து கால இடைவெளியைக் குறைக்கவேண்டுமென, தமிழ்நாடு முதலமைச்சருக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘கோவிட்ஷீல்டு’ தடுப்பூசி பற்றாக்குறை ஜூலை மாதம்வரை நீடிக்கும் – அதார் பூனாவாலா அறிவிப்பு

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனாவுக்காகப் போடப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையிலான கால இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக நீட்டித்து, ஒன்றிய  அரசு கடந்த 13.05.2021 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு தரவுகளின் அடிப்படையிலானதல்ல என்றும் நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு(NTAGI) குழுவைச் சார்ந்த மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்குப் புறம்பானது என்றும் தற்போது தெரியவந்துள்ளது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றிய அரசுக்கு கொரோனா தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கென அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் ஆலோசனைகளுக்குப் புறம்பாக ஒன்றிய அரசு இந்த முடிவை அறிவித்திருப்பது இப்போது வெளிப்பட்டுள்ளதாகவும் ரவிக்குமார் கூறியுள்ளார்.

கோவாக்சினும், கோவிஷீல்டும் ஒரே மாதிரியான சிகிச்சையை அளிக்கின்றனவா?

அதுமட்டுமன்றி, இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 என்ற வகை உருமாற்றம் அடைந்த வைரஸ் இப்போது உலக அளவில் அதிகம் பரவிக் கொண்டிருக்கிற வைரஸ் வகையாக அடையாளப்படுத்தப்பட்டு உலக சுகாதார நிறுவனத்தால் கவலைக்குரிய வைரஸ் என அறிவிக்கப்பட்ட்டுள்ளதாகவும், இது வேகமாகப் பரவுவது மட்டுமன்றி தடுப்பூசிகளைத் தாண்டி தொற்றை ஏற்படுத்தக்கூடியது என்று தெரியவந்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், “இந்த வைரஸ் வகையில் இன்னொரு புதிய உருமாற்றம் அடைந்த வைரஸின் வகை ( Delta Plus or AY.1 ) சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டிருப்பது மேலும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தடுப்பூசி மட்டும் தான் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்” என்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செங்கல்பட்டு கொரோனா தடுப்புமருந்து தயாரிப்பு நிறுவனத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

இத்தகைய இக்கட்டான சூழலில் ஒன்றிய அரசு மாநிலங்களுக்குத் தடுப்பூசி வழங்கும் விஷயத்தில் தொடர்ந்து தாமதத்தை ஏற்படுத்தி வருவதோடு கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கு இடையிலான கால இடைவெளியைத் தன்னிச்சையாக அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரிடம் இதுபற்றி எடுத்துரைத்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்குழு பரிந்துரைத்தது போல கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் இடையிலான கால இடைவெளியை 8 முதல் 12 வாரம் எனக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்