Aran Sei

வேளான் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகள் – உ.பி தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க திட்டம்

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசிற்கு பாடம் கற்பிக்கும் வகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டபேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வாக்களிப்பது குறித்து விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ராஷ்ட்ரிய கிசான் மன்ச் தெரிவித்துள்ளது.

நேற்று (ஆகஸ்ட் 3), செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஷ்ட்ரிய கிசான் மஞ்சின் தேசியத் தலைவர் சேகர் தீட்சித், உத்தர பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டபேரவைத் தேர்தலில் விவசாயிகள் விரோத பாஜக கட்சி தக்க பதிலடியை விவசாயிகள் தருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

“இதுகுறித்த எதிர்கால திட்டங்கள் குறித்து ஆகஸ்ட் 4 அன்று போராடும் விவசாயிகள் நடத்தும் ‘விவசாயிகள் நாடாளுமன்றத்தில்’ முடிவு செய்யப்படும். அதன் அடிப்படையில், போராட்டம் தீவிரப்படுத்தப்படும். ஒன்றிய அரசால் விவசாயிகளின் மீது திணிக்கப்பட்ட விவசாய சட்டங்கள் உண்மையில் விவசாயி எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ சார்பு சட்டங்கள் ஆகும்.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பேச்சுரிமையே வலிமையான ஜனநாயகத்தின் அடித்தளம் – தேசத்துரோக வழக்கு பதியப்பட்ட விவசாயிக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

“ஒன்றிய அரசு செய்த விவசாயிகளுக்கான வளர்ச்சி திட்டங்களை மக்கள் முன்பு வெளியிட வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டமான பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனாவானது விவசாய சட்டங்களின் நகல். இந்தத் திட்டம் தொழிலதிபர்களின் நலன்களைக் காப்பாற்றுவதற்காக அமல்படுத்தப்பட்டதால், தோல்வியடைந்தது.” என்று சேகர் தீட்சித் குறிப்பிட்டுள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க ஒன்றிய அரசு வேலை செய்கிறது என்று கூறுவது ஏமாற்று வித்தை மட்டுமே. அவ்வாறு கூறி, விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறது ஒன்றிய அரசு. போராடும் விவசாயிகளை ஒன்றிய அரசின் விவசாயத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் விதமும் அவற்றில் இருந்து பின்வாங்கும் விதமும் பெரிய நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு எவ்வாறு கடமைப்பட்டுள்ளது என்பதற்கு சாட்சியாக உள்ளது.” என்று ராஷ்ட்ரிய கிசான் மஞ்சின் தேசியத் தலைவர் சேகர் தீட்சித் கூறியுள்ளார்.

source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்