Aran Sei

வழக்குத் தொடுத்தப் பெண் எரித்து கொலை – பாலியல் வன்கொடுமை வழக்கில் பிணையில் வெளிவந்த நபரின் வெறிச்செயல்

ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர்ஹ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணை அதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளி வந்த நபரால் எரித்துக் கொலை செய்யபட்டிருக்கிறார்.

பலத்த தீக்காயங்களோடு கடந்த மார்ச் 4 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 6 அன்று உயிரிழந்துள்ளார் என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தானில் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி – 22 நாட்களுக்குப் பின் மீட்பு

இந்த வழக்கில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ராஜஸ்தான் மாநில முதல்வர் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம் அறிவித்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 4 அன்று குற்றம்சாட்டப்பட்ட பிஷ்ணோய், மண்ணெண்ணெய்யை கையில் எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணின் வீட்டுக்கதவை தட்டியதாகவும், அந்தப் பெண் கதவைத் திறந்த உடனேயே மண்ணெண்ணெய்யை அவரின் மீது ஊற்றித் தீ வைத்ததாகவும் தி வயர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை புகார் கூறியவரை திருமணம் செய்யக் கூறிய விவகாரம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகக் கோரிக்கை

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் தாய்வழி பாட்டி நடந்த சம்பவத்தைக் காவல் துறையிடம் தெரிவித்ததை அடுத்து பிஷ்ணோய் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள மாநில காவல் துறை துணை ஆணையர் தி.பி.லாத்தர், இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஹனுமன்கர்ஹ் பகுதி காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை விசாரித்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளதாகத் தி வயர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் – குற்றவாளியையே திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் நீதிமுறை

2018 ஆம் ஆண்டு, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பிஷ்ணோயால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருந்தார் என்றும், இந்த வழக்கில் பிஷ்ணோய் ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டு பின் பிணையில் வெளிவந்திருந்தார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்