Aran Sei

‘தொற்று காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி பணம் பறிக்கும் பாரதிய ஜனகொள்ளை கட்சி ‘ – ரன்தீப் சுர்ஜேவாலா விமர்சனம்

டந்த எட்டு நாட்களில் மட்டும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு ரூ. 1.40 மற்றும் ரூ. 1.63 -க்கு உயர்த்தி, மீண்டும் எண்ணெய் விற்பனையில் மோடி அரசு கொள்ளையடிக்கத் தொடங்கியுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (மே 11), செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள அவர், “130 கோடி இந்திய மக்கள் இன்று கொரோனா தொற்றுநோயைக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாரதிய ஜனகொள்ளை கட்சி  (பாஜக) இச்சூழ்நிலையிலும் மக்களிடம் லாபம் சம்பாதிக்கிறது. அவர்களை மிரட்டி பணம் பறிக்கிறது. தேர்தல்கள் முடிந்தவுடன், கடந்த எட்டு நாட்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு ரூ. 1.40 மற்றும் ரூ. 1.63 -க்கு உயர்த்தி, மீண்டும் எண்ணெய் விற்பனையில் கொள்ளையடிக்க தொடங்கியுள்ளது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை – ” ஜிஎஸ்டி தொடர்பான கேள்விகள் நிதி அமைச்சகத்துடன் தொடர்பில்லாதவை” : நிர்மலா சீதாராமன்

“பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிகமான கலால் வரியை இந்தக் கொடூரமான அரசு வசூலிப்பது மட்டுமின்றி, தினசரி விலையையும் உயர்த்திக்கொண்டே வருகிறது. மே 3 ஆம் தேதி தொடங்கி, கடந்த 8 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஆறு தடவை அதிகரித்துள்ளது.” என்று  ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

மோடி தலைமையிலான அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மட்டும் தொடர்ந்து அதிகரிக்கவில்லை என்றும் மக்களின் துயரங்களையும் சேர்ந்தே அதிகரிக்கிறது என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்