ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டின் சம்பளக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான எந்தவிதமான நிவாரண நடவடிக்கைகளையும் அறிவிக்காமல், அவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து, இன்று(பிப்பிரவரி 1), காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா, சம்பளக் குறைப்பு மற்றும் அதிகரித்துள்ள பணவீக்கத்தின் காரணமாக சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் ரன்தீப் சுர்ஜேவாலா, “இந்தியாவின் சம்பளம் பெறும் வர்க்கமும் நடுத்தர வர்க்கமும் இந்த பெருந்தொற்று காலத்தில் சம்பளக் குறைப்பையும் பணவீக்கத்தையும் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இவர்கள் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். நிதியமைச்சரும் பிரதமரும் நேரடி வரி நடவடிக்கைகளின் வழியாக அவர்களை மீண்டும் ஆழமாக ஏமாற்றியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
India’s Salaried Class & Middle Class were hoping for relief in times of pandemic, all round pay cuts and back breaking inflation.
FM & PM have again deeply disappointed them in Direct Tax measures.
This is a betrayal of India’s Salaries Class & Middle Class.#Budget2022
— Randeep Singh Surjewala (@rssurjewala) February 1, 2022
“இது இந்தியாவின் சம்பளம் பெறும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செய்யும் துரோகம். #பட்ஜெட்2022” என்று குறிப்பிட்டுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசுத் தலைவரின் உரை பொய்களால் ஆனது – பினோய் விஸ்வம்
அதைத்தொடர்ந்து அவர் எழுதியுள்ள மற்றொரு ட்வீட்டில், “நிதி அமைச்சர், தயவு செய்து இக்கேள்விகளுக்கான பதிலை நாட்டுக்கு மக்களிடம் சொல்லுங்கள் – கிரிப்டோ கரன்சி இப்போது சட்டப்பூர்வமானதா? கிரிப்டோ கரன்சி மசோதாவைக் கொண்டு வராமல், எப்படி நீங்கள் கிரிப்டோ கரன்சிக்கு வரி விதிக்கிறீர்கள்? அதன் ஒழுங்குமுறையைகள் என்னென்ன? கிரிப்டோ கரன்சி பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துவது பற்றி சொல்லுங்கள்? இதில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு குறித்து சொல்லுங்கள்?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
And Ms. Finance Minister, pl do tell the Nation –
Is Crypto Currency now legal, without bringing the Crypto Currency Bill, as you tax the crypto currency?
• What about its regulator?
• What about regulation of Crypto Exchanges?
• What about investor protection?#Budget2022— Randeep Singh Surjewala (@rssurjewala) February 1, 2022
2022-23ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, இந்த விமர்சனங்களை காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா வைத்துள்ளார்.
டிஜிட்டல் சொத்துகளை விற்பதன் வழியாக கிடைக்கும் எந்தவொரு வருமானத்திற்கும் 30 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அண்மைய காலங்களால இந்தியாவில் ஏற்றம் கண்டுள்ள, கிரிப்டோ கரன்சி மற்றும் என்எஃப்டிகளுக்கும் பொருந்தும்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.