Aran Sei

பாஜகவின் முழுப்பக்க தேர்தல் விளம்பரம்: மோடி, அமித் ஷாவுக்கு பரப்புரை செய்ய தடைவிதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என அசாம் தினசரிகளில் பாஜக வழங்கிய முழுப்பக்க விளம்பரம் தொடர்பான விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கும் பரப்புரை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் சுயாட்சி பகுதியாக இயங்கி வரும் போடோலாந்தை தாய் நிலமாக கொண்டு வாழும் போடோ இன மக்கள், தங்களுக்கு உரிய உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி, தனி மாநிலக் கோரிக்கையைத் தொடர்ந்து முன் வைத்துப் போராடி வருகிறார்.

 

பத்திரிகையாளரை மிரட்டிய பாஜக அமைச்சர் – அசாம் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார்

போடோலாந்த் போராட்டக் குழுத் தலைவர் எம்.பாதாவுடன் இணைந்து, தீவிரவாதத்தை முன்னெடுத்தால், போடோலாந்த் மக்கள் முன்னணி தலைவர் ஹக்ரமா மொஹிலாரியை தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) மூலம் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று பாஜக தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மிரட்டியதாக அசாம் மாநில காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்திருந்தது.

இதையொட்டி, நேற்று (ஏப்ரல் 2) அறிக்கை வெளியிட்டுள்ள அசாம் மாநில தேர்தல் ஆணையம், “ஏப்ரல் 02 ஆம் தேதி தொடங்கி அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் தொடர்பாக எந்தவொரு பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், சாலை நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் மற்றும் ஊடகங்களில் (மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்கள்) பேச ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.” என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் போடோலாந்த் தலைவரை மிரட்டிய பாஜக தலைவர் : பரப்புரைக்கு 48 மனி நேரம் தடை விதித்த தேர்தல் ஆணையம்

இந்நிலையில், இதுகுறித்து, இன்று (ஏப்ரல் 3) கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “ஹிமந்தா பிஸ்வா சர்மாவை 48 மணி நேரம் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதன் வழியாக, தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதியாகி உள்ளது. இத்தேர்தலில் பாஜக சில தந்திரங்களைக் கையாள முயல்கிறது என்பதும் நிரூபமாகியுள்ளது. ஆனால், அவர்கள் தங்களுடைய சதித்திட்டத்தில் வெற்றிபெறப் போவதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னர், சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என அசாம் தினசரிகளில் பாஜக முழுப்பக்க விளம்பரம் அளித்திருந்தது. இது தேர்தல் விதிமுறையை மீறும் செயல் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது.

அசாம் மாநிலத்தில் பாஜக முழுப்பக்க தேர்தல் விளம்பரம் – தேர்தல் நடத்தை விதிமீறல் என காங்கிரஸ் குற்றச்சாட்டு

இவ்விவகாரம் தொடர்பாக பேசிய அவர், “அசாமின் செய்தித்தாள் விளம்பரங்களில் காட்டப்பட்ட நரேந்திர மோடி, அமித் ஷா, சர்பானந்தா சோனோவால், ஜே.பி.நட்டா ஆகியோருக்கும் பரப்புரை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இதன் வழியாக அமைதியான வாக்கெடுப்பை அசாமில் நடத்த முடியும்.” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்