Aran Sei

ராமேஸ்வரம் கோயில் நகைகள் எடை குறைந்த சர்ச்சை – இணை ஆணையர் கல்யாணி அறிக்கை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமிகள் கோயில் நகைகளின் எடை குறைந்ததற்குப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் விதமாகக் கோயிலின் இணை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இராமேஸ்வரம் கோவில் நகை எடை குறைவு – குருக்களிடம் அபராதம் வசூலிக்கப்படுமா?

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்குச் சொந்தமான நகைகள் எடை குறைவானதென்று சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து 344 நகை வகைகளில் 42 வகை நகைகள் தேய்மானம்  அடைந்துள்ளன. இதன் அடிப்படையில் நகைகளின் இழப்பீட்டுத் தொகையாகச் சுமார் 15 இலட்சம் ரூபாயைக் கடந்த 40 வருடக் காலங்களில் கோயில்களில் பணியாற்றிய 47 ஊழியர்களிடம் வசூலிப்பது குறித்து நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார் இணை ஆணையர் கல்யாணி.

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சுவாமிக்குத் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட 344  வகைகளில் நகைகள் அணிவிக்கப்படும். அதில் 42 வகையான நகைகளின் எடை குறைந்துள்ளதாக ஆய்வுக் குழு அதிகாரிகள் கடந்த 3ம் தேதி கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் நகைகளின் எடை குறைவு குறித்துக் கோயிலில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் குருக்களிடம் தமிழக அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வந்தனர். தற்போது கோயில் இணை ஆணையர் கல்யாணி 40 வருடங்களாகக் கோயிலில் பணியாற்றிய குருக்கள், ஊழியர்கள் என 47 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

‘இராமநாதசுவாமி கோவில் நகைகள் எடை குறைவு விவகாரம்’ – வெள்ளை அறிக்கை வேண்டும்.

 

அந்த நோட்டீஸில் தங்கம், வெள்ளி, பவளம், வைடூரியம் என 344 நகை வகைகளில் 42 வகையான நகைகள் தேய்மானம் ஏற்பட்டுள்ளன. இந்தத் தேய்மானத்திற்குச் சுமார் 15 லட்சம் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை ஏன் தாங்களிடம் வசூல் செய்யக் கூடாது என அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார் இணை ஆணையர் கல்யாணி.

”இது ஒரு வழக்கமான அலுவலக நடைமுறை என்றும் முறைகேடுகள் ஏதும் நடைபெற்றதாக மதிப்பீட்டு அறிக்கையிலோ திருக்கோயில் பணியாளர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பிலோ தெரிவிக்கப்படவில்லை. எடை குறைவு தொடர்பாக எழுந்த சர்ச்சையால் பொது மக்களோ பக்தர்களோ திருக்கோயில் நகைகளின் பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமோ கவலையோ கொள்ளத் தேவையில்லை ” என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்