Aran Sei

தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படை: மீட்கவில்லை என்றால் தேர்தலைப் புறக்கணிக்க மீனவர் சங்கம் முடிவு

ராமேஸ்வரம், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 54 மீனவர்களையும் 5 விசைப்படகையும் காலதாமதமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். காலதாமதம் செய்யும் பட்சத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை மீனவர்கள் புறக்கணிக்கபோவதாக இராமேஸ்வரம் மீனவர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

நேற்று (மார்ச் 25), இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் கோவிலன் கடற்பரப்பில் படகில் பயணித்த 14 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சட்டவிரோதமாக மீனவர்களால் பிடிக்கப்பட்ட 1030 கிலோ மீன்களையும் இலங்கை படையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று  இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள்: கைது செய்தது இலங்கை கடற்படை

மேலும், வடமேற்கு மாகணத்தில் உள்ள மன்னார் பேசாலை கடற்பரப்பில் வைத்து இரண்டு விசைப் படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 20 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை கூறியுள்ளது.

அதேபோல, வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து இரண்டு படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 20 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் ஐந்து படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களோடு சேர்த்து நேற்று (மார்ச் 25) ஒரே நாளில் 54 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் ஒரே நாளில் 54 தமிழக மீனவர்கள் கைது : படகுகளும், மீன்களும் பறிமுதல்

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 54 மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட 5 விசைப்படகையும் காலதாமதமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் காலதாமதம் செய்யும் பட்சத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை மீனவர்கள் புறக்கணிக்கபோம் என்றும் தமிழக மீனவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்